தங்கம் விலை இன்றும் சவரனுக்கு ரூ.520 உயர்ந்தது. தொடர்ந்து 4 நாளில் மட்டும் சவரன் ரூ.1880 உயர்ந்தது.
தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது. கடந்த 10ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ஒரு சவரன் ரூ.41,520க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து 11ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,270க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,160க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தங்கம் விலை மீண்டும் சவரன் 42 ஆயிரத்தை தாண்டியது. தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், சனிக்கிழமை விலையிலே ஞாயிற்றுக்கிழமை தங்கம் விற்பனையானது.
ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு தங்கம் மார்க்கெட் நேற்று தொடங்கியது. அதில் தங்கம் விலை மீண்டும் அதிகரித்து காணப்பட்டது. நேற்று மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,325க்கும், சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,600க்கும் விற்கப்பட்டது.
இந்த நிலையில் தொடர்ந்து 4வது நாளாக தங்கம் விலை ஏறுமுகத்தில் உள்ளது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,390க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,120க்கும் விற்கப்பட்டது.
இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் தங்கம் விலை தொடர்ந்து 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,880 அளவுக்கு உயர்ந்துள்ளது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் சவரன் 43 ஆயிரத்தை தாண்டியது.