More

    Shut up. Shall We?

    A Centenary Plus, Retold 

    Homeதமிழகம்நீரில் மூழ்கிய 4 சிறுவர்கள் குடும்பத்துக்கு முதல்வர் நிவாரணம்..
    spot_img

    சினிமா...

    Featured Articles

    To Read in Indian languages…

    நீரில் மூழ்கிய 4 சிறுவர்கள் குடும்பத்துக்கு முதல்வர் நிவாரணம்..

    தமிழகத்தில் இரு இடங்களில் நீரில் மூழ்கி இறந்த 4 சிறுவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், வாராப்பூர் உள்வட்டம், உலகம்பட்டி குரூப் படமிஞ்சி கிராமத்தில் உள்ள செட்டி ஊருணியில் நேற்று அதே கிராமத்தைச் சேர்ந்த யாமினி (10), மகேந்திரன் (7), சந்தோஷ் (5) ஆகிய 3 சிறார்களும் குளிக்கச் சென்ற பொழுது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

    இதேபோல், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், மேலையூர் சரகம் மற்றும் கிராமம் ஐயர் காலனியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் அபினேஷ் (16) என்பவர் அதே தெருவின் பின்புறம் உள்ள தனியாருக்கு சொந்தமான மீன் வளர்ப்பு குட்டைக்கு குளிக்க சென்ற பொழுது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்ற துயரச் செய்தினையும் கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன்.

    உயிரிழந்த நான்கு சிறார்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டு உள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    seven − 1 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Exit mobile version