spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeதமிழகம்தமிழக சட்டசபையில் 2023-24ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட் இன்று  தாக்கல்..

தமிழக சட்டசபையில் 2023-24ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட் இன்று  தாக்கல்..

- Advertisement -
500x300 1852753 mrk1

தமிழக சட்டப்பேரவையில் 2023-24ம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை இன்று  தாக்கல் செய்யப்பட்டது .இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் கூடியதும், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2023-24ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை தாக்கல் செய்து தமது உரையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவை பின்வருமாறு..,.

2,504 கிராமங்களில் ரூ.230 கோடி நிதியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்டம்.

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் 2021-22ல் 40.74 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 26 லட்சம் விவசாயிகள் பதிவு செய்தனர்.

தமிழ்நாடு அரசால் ₹1695 கோடி காப்பீடு கட்டணம் மானியமாக வழங்கப்பட்டு, 6.77 லட்சம் விவசாயிகளுக்கு ₹783 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது

ஆறுகள், கால்வாய்களில், தடுப்பணைகள், வயல் சாலைகள் அமைத்ததால் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது.

சிறு தானிய பரப்பை அதிகரிக்க 20 மாவட்டங்கள் அடங்கிய இரு சிறுதானிய மண்டலங்கள் அமைக்கப்படும்

நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, புதுக்கோட்டை மாவட்டங்கள் சிறுதானிய மண்டலங்களில் சேர்க்கப்பட்டுள்ளது.

கம்பு, கேழ்வரகு நேரடியாக கொள்முதல் செய்து கல்வி நிலையங்களுக்கு வழங்கப்படும்.

2,504 கிராம பஞ்சாயத்துகளில் ஊருக்கு 300 குடும்பங்கள் வீதம் தமிழ்நாடு முழுவதும் 15 லட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்

கம்பு, குதிரைவாலி போன்ற பயிர்களை அதிகமாக விளைவிக்கும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

நியாய விலைக் கடைகளில் கேழ்வரகு, கம்பு போன்ற சிறுதானியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

முதற்கட்டமாக தருமபுரி, நீலகிரி மாவட்டங்களில் ரேசன் அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு வழங்க திட்டம்

60,000 சிறு குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வேளாண் கருவிகள் தொகுப்பு ₹15 கோடி செலவில் வழங்கப்படும்

பருவத்திற்கு ஏற்ற பயிர் தொழில்நுட்பம் பற்றிய தகவல்களை உழவர்களுக்கு பகிர்வதற்காக விவசாயிகளை ஒருங்கிணைத்து கிராம வேளாண் முன்னேற்ற குழு அமைக்கப்படும்

வேளாண்மையில் நம்மாழ்வார் ஆற்றிய பெரும் பங்கை எடுத்துரைக்கும் விதமாக அங்கக வேளாண்மையில் ஈடுபடுபவர்களுக்கு, தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும்.இவ்விருது ₹5 லட்சம் காசோலையுடன், பாராட்டு பத்திரம் குடியரசு தினத்தன்று வழங்கப்படும்.

நெல் ஜெயராமன் மரபு பாதுகாப்பு இயக்கம் மூலம் 196 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் விதைகள் வழங்கப்பட்டன.

வேளாண்மை தோட்டக்கலை பட்ட படிப்பு முடித்த பட்டதாரிகள், தொழில்முனைவோராக தலா 2 லட்சம் நிதி உதவி வழங்க 4 கோடி நிதி ஒதுக்கீடு

விவசாயத்தில், ரசாயனம், உர பயன்பாட்டை குறைத்து, இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க 32 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.26 கோடி ஒதுக்கீடு

இயற்கை உரங்களை தயாரிக்க 100 குழுக்களுக்கு 1 லட்சம் வீதம் வழங்க, ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு

ஏ*ரி, குள வண்டல் மண்ணில் ஊட்ட சத்து இருப்பதால் விவசாயிகள் இவற்றை இந்த ஆண்டும் வயல்களுக்கு இலவசமாக எடுத்துக் கொள்ளலாம்

நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண்மை திட்டம் ரூ.50 கோடியில் செயல்படுத்தப்படும்

1 லட்சம் ஏக்கரில் மாற்று பயிர் சாகுபடிக்கு ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு

6 லட்சம் ஏக்கரில் நெல்லுக்குப் பின் மாற்றுப் பயிர் சாகுபடி செய்ய ரூ.24 கோடி நிதி ஒதுக்கீடு

வேளாண் உற்பத்தி, கொள்முதல் உள்ளிட்டவற்றிக்காக, 37 மாவட்டங்களில் பணம் இல்லா பரிவர்த்தனையை விரிவுபடுத்த திட்டம்

மின்னணு வேளாண்மை திட்டத்தின் கீழ், 37 மாவட்டங்களில் பணம் இல்லா பரிவர்த்தனை விரிவுபடுத்தப்படும்

355 வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் ரூ.2 கோடியில் மின்னணு உதவி மையங்கள் அமைக்கப்படும்

விவசாயிகளுக்கு தேவையான தொழில் நுட்பம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் கொண்டு செல்ல வட்டார அளவில் வாட்சப் குழுக்கள்,இயற்கை இடர்பாடுககளால் பாதிக்கபட்ட 40.74 லட்சம் ஏக்கர் பதிவு செய்த 26 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு,வரும் ஆண்டில் 127 மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்ய இலக்கு,ஊரக வளர்ச்சித் துறையுடன் இணைந்து உழவர்களுக்கு தேவையான கட்டமைப்புகள் உருவாக்கம்,
விவசாயிகளிடம் இருந்து சிறுதானியங்களை நேரடியாக கொள்முதல் செய்து, நியாய விலைக்கடைகள் மூலம் விநியோகம் செய்ய திட்டம் கொண்டு வரப்படும்.

உணவு தானிய உற்பத்தியில் சிறந்து விளங்கும் மாவட்ட, வட்டார அலுவலர்களை ஊக்கப்படுத்த விருதுகள்,சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சிறுதானிய திருவிழா நடத்தப்படும்.

ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு,வேளாண் காடு திட்டம் மூலம் விவசாயிகளுக்கு 75 லட்சம் செம்மரம், தேக்கு,சந்தனம் முழு மானியத்தில் வழங்க 15 கோடி ஒதுக்கீடு,ஆதி திராவிட, பழங்குடியின சிறு – குறு விவாசாயிகளுக்கு கூடுதலாக 20% மானியம்,ஆதி திராவிட சிறு – குறு விவாசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.10 கோடி ஒதுக்கீடு,
பழங்குடியின சிறு – குறு விவாசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு,பல்வேறு துறைகளின் திட்டப் பலனை விவசாயிகள் ஒரே இடத்தில் பெற உதவும் வகையில், ஒரு தளம் ஒரு பயன் திட்டம் அமல். 13-க்கும் மேற்பட்ட துறைகளின் திட்டப் பலன் இந்த இணைய தளம் மூலம் கிடைக்கும்.

கறவை மாடு, ஆடுகள், கோழி, தீவனப் பயிர், பழ மரங்கள், மரக் கன்றுகள், தேனீக்கள், மண்புழு உரம், பண்ணைக் குட்டை நீர் வளர்ப்பு. இவை அனைத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து, ரூ.50,000 மானியம் வழங்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கருவேப்பிலை சாகுபடியை அதிகரிக்க 5 ஆண்டுகளில் ரூ.1,500 ஹெக்டேரில் செயல்படுத்த ரூ.2.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe