சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற வற்றில் சிறப்பாகச் செயல்படுவோருக்கான ஆளுநரின் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றில் சிறப்பா கச் செயல்படுவோருக்கு நிகழாண்டுக்கான ஆளுநர் விருது வழங் கப்பட உள்ளது. இந்த விருதுக்கு ஜூலை 31- ஆம் தேதிக்குள் விண் ணப்பிக்க வேண்டும். ஒரு நிறுவனம், 3 தனி நபர்கள் விருதுக்கு தேர்ந் தெடுக்கப்படுவர்.
விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனத்துக்கு ரூ. 5 லட்சம், தனி நபர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
விண்ணப்பங்கள் தேர்வுக் குழு மூலம் பரிசீலிக்கப்பட்டு விருதுக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பங்களை
ஆளுநரின் துணைச் செயலர்,
கட்டுப்பாட்டாளர்,
ஆளுநர் அலுவலகம்,
ஆளுநர் மாளிகை, சென்னை -600 022
என்ற முகவரிக்கோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம்.
விண்ணப்பங்களை www.tnrajbhavan.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://www.tnrajbhavan.gov.in/PressReleases/2023/PR040623-3.pdf