சென்னை ஐஐடியில் நடந்த மத்திய அரசு நிகழ்ச்சியில் சமஸ்கிருதத்தில் ‘மகா கணபதி’ பாடல் ஒலிபரப்பப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டிய அவசியமில்லை. நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உருவாக்கப்பட்டது தான் ஐஐடி. தமிழக அரசின் நிகழ்ச்சிகளில்தான் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்றார்.