மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியை நிர்மலா மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு

இதனிடையே கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் பேராசிரியை மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டது. விருதுநகர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் மதி இதனைத் தெரிவித்தார்.

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் தேவாங்கர் கலைக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியை நிர்மலாதேவி மீது போலீசில் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதை அடுத்து புகாரைப்பெற்றுக் கொண்ட போலீஸார் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கல்லூரியின் கணித பேராசிரியை நிர்மலா தேவி மாணவியர் நால்வரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு, அதிகாரிகள் சிலருக்கு அனுசரணையாக நடந்து கொண்டால், நல்ல மதிப்பெண்கள், கைநிறைய பணம் கிடைக்கும் என்று கூறி ஆசை காட்டினார். இந்த உரையாடல், ‘வாட்ஸ் ஆப்’பில் வைரலாகப் பரவியது. இவ்வாறு மாணவிகளிடம் தவறாகப் பேசிய பேராசிரியையைக் கண்டித்து அருப்புக்கோட்டையில் மாதர் சங்கத்தினர் மற்றும் மாணவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

சம்பந்தப் பட்ட பேராசிரியை மீது போலீசில் புகார் அளிக்குமாறு கல்வித் துறைச் செயலர் சுனில் பாலிவால் கேட்டுக் கொண்டதை அடுத்து, கல்லூரி நிர்வாகம் சார்பில் தாசில்தார் கார்த்திகேயனிடம் புகார் அளிக்கப்பட்டது. டி.எஸ்.பி., தனபாலிடம் , கல்லூரி முதல்வர் பாண்டியராஜன், மாதர் சங்கத்தினர் இணைந்து புகார் அளித்தனர். மேலும் இது குறித்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என டி.எஸ்.பி., தனபால் கூறினார்.

இதனிடையே மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற பேராசிரியை நிர்மலாவை விசாரிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளதாக, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் பேராசிரியை நிர்மலா தேவி வீட்டைச் சுற்றி போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப் பட்டனர். தாசில்தார் உள்பட டிஎஸ்பி ஆகியோர் பேராசிரியை வீட்டுக்குச் சென்றபோது, கதவு உள்பூட்டு போடப்பட்டிருந்ததால் அவரது உறவினர்கள் முன்னிலையில் கதவைத் திறக்க போலீசார் முடிவு செய்தனர்.

இதனிடையே கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் பேராசிரியை மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டது. விருதுநகர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் மதி இதனைத் தெரிவித்தார்.

மாணவிகளுக்கு ஆசை வார்த்தை கூறி பல்கலை., பெரிய மனிதர்களுக்கு இரையாக்க பேரம் நடத்தும் பேராசிரியை குறித்த வைரல் ஆடியோ பதிவு…. 

https://www.youtube.com/watch?v=V02lASnyelQ&t=40s