அதன்படி கூவம் நதியை முழுமையாகச் சீரமைத்திட ஒருங்கிணைந்த கூவம் நதி சுற்றுச்சூழல் சீரமைப்பு திட்டப்பணிகள் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக முதல் 3 ஆண்டுகளில் குறுகியகால திட்டமாக 60 துணைதிட்டங்களும், இரண்டாம் கட்டமாக 4 முதல் 8 ஆண்டுகளில் 7 துணைதிட்டங்களும், மூன்றாம் கட்டமாக சீரமைப்புப்பணிகள் முடிவடைந்தவுடன் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தின் மொத்தமதிப்பு 1,934 கோடியே 84 லட்சம் ரூபாய் ஆகும்.
ஒருங்கிணைந்த கூவம் நதி சுற்றுச்சூழல் சீரமைப்பு திட்டத்தின் முக்கிய நோக்கம், கழிவுநீர் கூவம் நதியில் கலப்பதை தடுக்க மாற்று ஏற்பாடுகள் செய்தல், திடக் கழிவு மேலாண்மை, நதியின் வெள்ளநீர் கொள்ளளவை மேம்படுத்தி பராமரித்தல், கூவம் நதிக் கரையில் வாழும் மக்களுக்கான மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வுக் கான திட்டமிடல், பல்லு யிர் பெருக்கத்தை மீட்டு சுற்றுச்சூழலை மேம்படுத்தி நகர்ப்புறங்களில் நதியின் கரையோரங்களில் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ளுதல் ஆகும்.
கூவம் நதியின் சீரமைப்பு பணிக்காக மூன்று ஆண்டுகளில் குறுகியகால திட்டமான 60 துணைதிட்டங்களை செயல்படுத்திட தமிழக அரசு 604 கோடியே 77 லட்சம் ரூபாய் நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் ஆவடி அருகேயுள்ள பருத்திப்பட்டு அணையிலிருந்து கூவம் முகத்துவாரம் வரையிலான 27.3 கிலோமீட்டர் நீளமுள்ள கூவம் நதிப்பகுதிகளை சீரமைத்திட 604 கோடியே 77 லட்சம் ரூபாய் செலவிலான ஒருங்கிணைந்த கூவம் நதி சுற்றுச்சூழல் சீரமைப்பு திட்டத்திற்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.
மேலும், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால் கோயம்பேட்டில் நாளொன்றிற்கு 120 மில்லியன் லிட்டர் திறன்கொண்ட 87 கோடியே 35 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்; சென்னை மாநகருடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றுவாரியத்திற்கு 19 கோடியே 62 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 82 அலுவலக கட்டிடங்கள்; சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் 58 பணிமனை அலுவலகங்கள் மற்றும் சென்னை மாநகராட்சி 20 கோட்ட அலுவலங்களில் 3 கோடியே 22 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 78 பொது வரிவசூல் மையங்கள் என மொத்தம் 110 கோடியே 19 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டிடங்களை ஜெயலலிதா திறந்துவைத்தார்.
சென்னை, மீனம்பாக்கத்தில் சுமார் ஐந்தாயிரம் பொதுமக்கள் பயனடையும் வகையில் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தால் 59 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் வழங்கல் திட்டப்பணிகள் மற்றும் 4 கோடியே 11 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பாதாளசாக்கடை திட்டப்பணிகள் என மொத்தம் 4 கோடியே 70 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். ஜெயலலிதா அடிக்கல் நாட்டியும், திறந்தும், தொடங்கியும் வைத்த திட்டங்களின் மொத்த மதிப்பு 719 கோடியே 67 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ஆகும்.