சென்னை: 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் வெளியான தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்திருந்த நடிகை கஸ்தூரி, 18ல் பாதி என திருநங்கைகளுடன் ஒப்பிட்டு ட்விட்டரில் பதிவு செய்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், கஸ்தூரி வீட்டின் முன்னர் திருநங்கைகள் போராட்டம் நடத்த முயன்றனர்.
தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த அவைத்தலைவரின் உத்தரவு செல்லும் என்றார். ஆனால், நீதிபதி சுந்தரோ, அவைத்தலைவரின் உத்தரவு செல்லாது என தீர்ப்பு வழங்கினார். இரு நீதிபதிகளும் இருவேறு விதமாக தீர்ப்பு கொடுத்ததால், மூன்றாவது நீதிபதி அமர்வுக்கு வழக்கு பரிந்துரைக்கப் பட்டது.
இந்நிலையில், 18 பேரின் தகுதி குறித்த வழக்கில் பாதி செல்லும் என்றும் பாதி செல்லாது என்றும் கருத்தில் கொண்டு, இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார் நடிகை கஸ்தூரி. அதில், “அரசியல் ரீதியாக இது தவறான நகைச்சுவை.. இரு வேறுபட்டு தீர்ப்பு சொல்லிட்டாங்களாமே! 18ஐ பிரித்து ஆளுக்கு ஒம்போதா? ஆஆங்! எனக் குறிப்பிட்டு இரு திருநங்கையரின் படங்களையும் இணைத்திருந்தார்.
இந்தப் படத்தையும் டிவிட்டையும் கண்ட பலரும், கஸ்தூரிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதை அடுத்து, நெட்டிசன்கள