23/09/2019 7:18 PM

மாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு! நேரில் ஆஜராக உத்தரவு!
சென்னை: உயர் ரக பிஎஸ்என்எல். தொலைபேசி இணைப்புகளை சட்ட விரோதமாக சன் தொலைக்காட்சிக்கு பயன்படுத்தியது தொடர்பான வழக்கில், கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என சென்னை சிபிஐ நீதிமன்றம் கூறியுள்ளது. அன்று இருவரும் ஆஜராக வேண்டுமென்று அது உத்தரவிட்டுள்ளது.

தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது, அதிவேக பிராட்பேன்ட் இணைப்புகளை சட்டவிரோதமாக சன் தொலைக்காட்சிக்கு பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரையும் சிபிஐ., நீதிமன்றம் விடுவித்தது.

ஆனால், அந்த உத்தரவுக்கு  எதிரான சிபிஐ., யின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ. சமர்ப்பித்த ஆதாரங்கள் போதுமானவை என்று தெரிவித்தது.

இதை அடுத்து, 7 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம், வழக்கை மீண்டும விசாரிக்க சிபிஐ., நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்ததை அடுத்து, இந்த வழக்கு சிபிஐ., நீதிமன்ற நீதிபதி ஆர்.வசந்தி முன் கடந்த 11ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது குற்றம் சாட்டப்பட்ட 7 பேருக்கு எதிராக ஆகஸ்ட் 17ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என நீதிபதி அறிவித்தார். அன்றைய தினம் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவை ஒட்டி நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பிஎஸ்என்எல்., முன்னாள் பொது மேலாளார் பிரம்மநாதன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கேரளாவில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள பிரம்மநாதன் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை எனக் கூறினார். மேலும், மற்றவர்களின் தரப்பிலும் குற்றச்சாட்டு பதிவு செய்வதை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் என கூறிய நீதிபதி, அன்று தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.Recent Articles

4 புதிய நீதிபதிகள் பதவிஏற்பு! முழு பலத்தை அடைந்த உச்ச நீதிமன்றம்!

உச்ச நீதிமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ராமசுப்பிரமணியன் உள்பட 4 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்ற நிலையில் உச்ச நீதிமன்றம் முழு பலத்தை எட்டியுள்ளது.

3வது கட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு; லாரி நிறுத்த போராட்டம் வாபஸ்.!

லாரிகளுக்கு முறையான வாடகை நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டம் வட்டாட்சியர் தலைமையில் நடந்த 3வது கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வாபஸ் பெறப்பட்டதாக கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

ஆந்திர துணை முதலமைச்சர் நடிகையாகியுள்ளார்!

இந்தப் படத்தின் ஆசிரியர் கதாபாத்திரத்தில் புஷ்பா ஸ்ரீவாணி நடிக்கிறார். இதற்காக விழியநகரம் மாவட்டத்தில் உள்ள கொரடா கிராமத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டார். இவருடன் விழியநகரம் மாவட்ட ஆட்சித்தலைவரான ஹரிஜவஹர்லாலும் படப்பிடிப்பில் பங்கேற்றார்.

பட்டப்பகலில் மாணவரை வெட்டித் தப்பி ஓட்டம்! தூத்துக்குடியில் பயங்கரம்!

அப்போது, நான்கு இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்த கும்பல், கல்லூரி அருகிலேயே அபிமன்யூவை வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளது. இதில் தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் அடைந்ததால் சுருண்டு விழுந்த அபிமன்யூ, சம்பவ இடத்திலேயே உயிரிழந்‌தார். இதையடுத்து, அந்த கும்பல் தப்பிச் சென்றது.

மோடி, டிரம்புடன் செல்ஃபி எடுத்த ‘லக்கி பாய்’! இத ஃபேமஸ் நடிகர் சிவகுமாருக்கு காட்டுங்க டோய்!

இன்று டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாக்ராம் என சமூகத் தளங்களில் வைரலாகியிருக்கிறது அந்த செல்ஃபி. அது குறித்து வீடியோ பதிவும் வைரலாகி வருகிறது.

Related Stories