மறைந்த கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று சென்னையில் நினைவேந்தல் கூட்டம் நடைபெறுகிறது.
தெற்கில் உதிக்கும் சூரியன் என்ற தலைப்பில், கருணாநிதி நினைவேந்தல் கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்குகிறார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். முன்னாள் பிரதமர் தேவகவுடா, பா.ஜ.க. சார்பில் மத்தியமைச்சர் நிதின்கட்காரி, தேசிய செயலாளர் முரளிதரராவ், காங்கிரஸ் கட்சி சார்பில் குலாம்நபி ஆசாத் எம்.பி.,தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், ஆந்திரா மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர். அகில இந்திய தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.