மூன்று ஊராட்சிகளில் இன்று சமூக தணிக்கை கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.
மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், அனைத்து ஊராட்சிகளிலும் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில், வரவு- – செலவு கணக்குகளை, அந்தந்த கிராமவாசிகளின் முன்னிலையில், சமூக தணிக்கை அதிகாரிகள் முதன்மைப்படுத்தி, ஒப்புதல் பெறுவர்.
அதன்படி, ஆலப்பாக்கம், ஆரியம்பாக்கம், பூசிவாக்கம் ஆகிய ஊராட்சிகளில், நாளை, சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.