அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான, நீட் பயிற்சி வகுப்புகள், கோவை மாவட்டத்தில், 14 மையங்களில் இன்று துவங்கவுள்ளதாக, முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் தெரிவித்தார்.கோவை மாவட்டத்தில், ராஜவீதி, தொண்டாமுத்துார் அரசு மகளிர் பள்ளி உட்பட, 14 பள்ளிகள் பயிற்சி மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. தாவரவியல், விலங்கியல், கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களில், நுட்பமான கேள்விகளையும் எதிர்கொள்ளும் வகையில், பயிற்சியின் தன்மை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு மையத்தில், பாடம் ஒன்றுக்கு ஆறு ஆசிரியர்கள் வீதம், 30 ஆசிரியர்கள் பயிற்சி வழங்கவுள்ளனர். மாவட்டம் முழுவதும், 420 ஆசிரியர்கள் சனி, ஞாயிறுகளில் நடக்கும் இப்பயிற்சி பணிக்காக, தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் கூறுகையில், ”14 மையங்களில் நடக்கும் பயிற்சியில், ஈடுபடவுள்ள ஆசிரியர்களுக்கு, முறையாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது,” என்றார்.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari