நெசவாளர்களின் வாழ்வு உயர்ந்திட பொதுமக்கள் கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் கொண்டாடப்படுவதை குறிப்பிட்டுள்ளார். மேலும், காந்தி அறிவுறுத்தலின்படி, இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கதர் ஆடைகளை மக்கள் அனைவரும் அணிந்து, கதர் துணி பயன்பாட்டினை ஊக்குவிக்க வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அரசின் 88 அங்காடிகள் மூலம் கதர் ஆடைகள் விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், இளைஞர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.