வைரமுத்து விவகாரத்தில் சக பாடகிகளுக்கு தயக்கம்: சின்மயி பகீர்

வைரமுத்து மீது நான் கூறிய குற்றச் சாட்டுகள் அனைத்தும் உண்மை

வைரமுத்து தவறாக நடந்து கொண்டார் என கூறுவதற்கு சக பாடகிகள் பலருக்கு தயக்கம் உள்ளது என்று கூறி அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறார் பாடகி சின்மயி.

மேலும் வைரமுத்து மீது நான் கூறிய குற்றச் சாட்டுகள் அனைத்தும் உண்மை என்று அடித்து கூறுகிறார் சின்மயி.

2004ல் நடந்த சம்பவத்துக்கு இப்போது ஏன் குற்றச்சாட்டு என்றும், பின் ஏன் தன் திருமணத்திற்கு வைரமுத்துவை அழைத்தார் என்றும் கேட்கிறார்கள்…

என் திருமணத்திற்கு தொடர்பாளர்கள் மூலம்தான் வைரமுத்துவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது.. என்கிறார் சின்மயி.