- Ads -
Home சினிமா சினி நியூஸ் ரசிகரின் செல்பி மோகம்… நடிகர் சிவகுமார் கோபம்! இன்றைய சமூகதள கொத்துக்கறி மேட்டரே அதான்..!

ரசிகரின் செல்பி மோகம்… நடிகர் சிவகுமார் கோபம்! இன்றைய சமூகதள கொத்துக்கறி மேட்டரே அதான்..!

செல்ஃபி எடுக்க வந்தவரின் மொபைலைத் தட்டிவிட்ட சிவக்குமார்! இதுதான் இன்றைய ஹாட் டாபிக்! சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்ட விஷயமும் கூட!

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்ட தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவக்குமார் மற்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வைப் பற்றி அறிந்த ரசிகர்கள் நடிகர் சிவக்குமாரைக் காண, பெரும் கூட்டமாக திரண்டிருந்தனர். திறப்பு விழாவுக்காக உள்ளே சிரித்த முகமாக வந்தார் சிவக்குமார்.

அங்கு ஒரு ரசிகர் தன்னுடன் செல்ஃபி எடுக்க முயற்சிப்பதைக் கண்டதும், திடீரென அவரது மொபைலை தட்டிவிட்டார். இந்த வீடியோ இன்று காலையில் இருந்தே இணையம் எங்கும் தீவிரமாக பரவி வருகிறது. மேலும் சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் குறித்து பலரும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.

ALSO READ:  மக்களுக்கான டிஜிட்டல் பயன்பாட்டை முழுமை பெறச் செய்வோம்: மனதின் குரலில் மோடி!

இது குறித்த ஒரு வித்தியாசமான பதிவு….

செல்பி எடுக்க வந்தவரோட செல்போனை தட்டி விட்டு, சமூக வலைத்தளங்களில் இன்றைய கொத்துக்கறி ஸ்பெஷலிஸ்ட் ஆகிப் போயிருக்கிறார் நடிகர் சிவகுமார்.

கடந்த பத்து ஆண்டுகளாகவே அவர் அடிக்கடி உணர்ச்சி வசப்பட்டு ரொம்பவே தடுமாற்றத்துடன் காணப்படுகிறார்.. என்ன பேசுகிறோம் என்ன செய்கிறோம் என்பதே அவருக்கு புரியாமல் போய்க்கொண்டிருக்கிறது.

2014 ஜுன் மாதம் ஒரு பேட்டி… 192 படங்கள் நடித்த 40 ஆண்டு கால சினிமா வாழ்க்கையும் என் 7 ஆண்டு கால ஓவியன் வாழ்க்கையின் கால் தூசுக்குக் கூட ஈடாகாது என்று சொல்லியிருந்தார் நடிகர் சிவக்குமார். இதைத்தான் பிதற்றல்தனமான பேச்சு என்று அன்றே சொன்னோம்…

ஓவியக்கலை அற்புதமானதுதான்.. அதற்காக பெரும் புகழையும் செல்வத்தையும் தேடித் தந்த சினிமாவை கேவலமாக பேசுவதா?

ஓவியக்கலையை நம்பி சோத்துக்கு லாட்டரி அடிக்கிறதே நிரந்தரமா ஆயிந்திருந்தா, இப்படி பேசியிருப்பீங்களா சிவக்குமார்? என்றெல்லாம் கேட்டோம்..

இயல்பை விட்டு எதுவாகவோ மாறப்போனால், காமடியாகிப் போய் தூக்கி கடாசப்படுவோம் என்பதை யாராவது அவரிடம் சொல்வது நல்லது.. கடைசியா ஒரு சந்தேகம்..

ALSO READ:  நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்; பிரதமர் மோடி இரங்கல்!

யோகா பண்றவங்களுக்கு இவ்ளோ கோபம் வருமா? ஏன்னா, அடிக்கடி ஆட்டுக்கால் பாயா சாப்பிடற நமக்கே டக்குன்னு கோபம் வரமாட்டேங்குதுன்ற டவுட்லதான் கேக்கறோம்..

1 COMMENT

  1. இவர் நடிக்கும்போது அந்த செல்பி வீடியோ எடுத்த பையன் சினிமா பார்க்கும் வயதுக்கு வந்திருக்க மாட்டான் அவனை தனது ரசிகர் என்று அவர் கூறியது காமெடி – 2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version