தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்தத் தாழ்வு நிலை இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வருவதாகவும் இதனால், குமரிக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதி மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், குமரிக் கடல் பகுதி மீனவர்கள் நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழகம் புதுவையில் பரவலாக மேகமூட்டம் காணப்படும் என்றும் பரவலாக லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari