மோடி வெற்றி பெறவேண்டும் என தெருத் தெருவாக அலைந்தவர் வைகோ! ஸ்டாலின் இன்று நாயுடுவுடன் பேசினார் நாளை மோடியுடன் பேசுவார்!

இந்தியா ஏழை நாடு கிடையாது., அதை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்! இங்கிலாந்து தான் ஏழை நாடாக மாறி வருகின்றது. இந்தியா ஒரு வளர்ந்து வரும் நாடு, ஒரு பெரிய வல்லரசாக வருகின்ற வரைக்கும் இந்த நாடு வளர்ந்து கொண்டு வருகின்றது. ஆகவே உலக அளவில் பாராட்டு கிடைக்க கூடிய வகையில் உலக அளவில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்ததோடு, பொருளாதாரம் மேம்பட்டு வருகின்றது.

  • மோடி வெற்றி பெற வேண்டுமென்று தெருத் தெருவாக அலைந்தவர்தான் வை.கோ.,!அதே நேரத்தில் தி.மு.க கட்சியினை தோற்கடித்ததும் வை.கோ தானே! ஆக மு.க.ஸ்டாலினுக்கு வை.கோ மீது கோபம் இருக்கும் என்று காண்பிக்க உள்ளாரோ..! காண்பிப்பார்!
  • ஸ்டாலின் இன்று சந்திரபாபு நாயுடுவிடம் போசினார்; நாளை மோடியிடமும் பேசுவார்., அரசியலில் எதுவும் நடக்கலாம்!
  • 4 ½ வருடங்களாக சந்திரபாபு நாயுடுவிற்கு மோடி நல்லவராக இருந்த நேரத்தில் தற்போது…? ஸ்டாலின் நல்லவரா? அதே நேரத்தில் 4 ½ வருடங்களாக எதிர்த்த மோடி அரசின் அமித்ஷாவை அழைத்து கருணாநிதிக்கு நினைவேந்தல் நடத்தவில்லையா?
  • மத்திய அரசின் திட்டங்கள் இந்தியில் உள்ளதால் எல்லா மக்களுக்கும் புரியவில்லை, இந்தி என்கின்ற பெயரை காங்கிரஸ் ஆட்சியாக இருந்தாலும் சரி, பா.ஜ.க ஆட்சியாக இருந்தாலும் சரி… அடிமைப்படுத்தாதீர்கள் ?
  • தமிழகத்தினை பொறுத்தவரை இரு மொழிக் கொள்கை தான் – இந்திக்கு எப்போதும் ஆதரவாக இருக்க மாட்டோம்!
  • இந்திக்கு என்றுமே ஆதரவாக இருக்க மாட்டோம்! தமிழில் தான் செயல்படுவோம் – தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்திற்கும் மத்திய அரசு போதிய அதிகாரம் தரவேண்டும்., மத்திய அரசின் திட்டங்கள் தமிழ் மொழியில் வேண்டும், ஏனென்றால் எல்லாம் இந்தியில் தான் வருகின்றன – மத்திய அரசின் திட்டங்களின் பெயர்கள் நாட்டு மக்களுக்கு புரிகின்றதா? இந்தியா வலிமை நாடாக இருந்தால் மாநிலங்களின் வளர்ச்சி அதிகமாக இருக்க வேண்டும்
  • மோடி அவர்கள் எங்களது நண்பர் தான்! மத்திய அரசும், மாநில அரசும் சுமூகமாக செயல்பட்டு வருகின்றது – ஆனால்? கட்சி வேறு, ஆட்சி வேறு.! எங்களுக்கு கொள்கைகள் இருக்கின்றன !

– இவை எல்லாம் மக்களவை துணைத் தலைவர் தம்பித்துரையின் ஒப்பன் டாக்!


கரூரில் காந்தி கிராமத்தில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி கட்டடப் பணிகளை கரூர் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை நேரில் பார்வையிட்டார்.

அப்போது, மருத்துவக்கல்லூரி அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். விரைவில் அனைத்து வேலைகளும் நடைபெறவேண்டுமென்றும், மக்களின் பயன்பாட்டிற்கு வரும் அளவிற்கு சிறப்பான முறையில் மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணிகள் அமைய வேண்டுமென்றார் தம்பிதுரை.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை., செய்தியாளர்களுடன் பேசினார். செய்தியாளர்களிடம் அவர் கூறியவை…!

அப்போது இங்கிலாந்து  நாட்டில்  கன்சர்வேடிவ் கட்சியை  சேர்ந்த  பாராளுமன்ற உறுப்பினர்  பீட்டர் போன்,  இந்தியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையானது.,  உலகின்  மிக உயரமான  சிலை  என்றும், கடந்த 4 ஆண்டுகளில் இந்தியா ஏழை நாடு என்று கூறி., இங்கிலாந்து நாட்டிடம்  நலத் திட்டங்க்ளுக்கு ரூ. 10  ஆயிரம் கோடி  நிதி  உதவியை  பெற்றுள்ளது.  அப்படி  இருக்க  உலகின்  மிகப்  பெரிய சிலையை  நிறுவுவது  முட்டாள் தனமானது”  என  கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு அவர், இந்தியா ஏழை நாடு கிடையாது., அதை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்! இங்கிலாந்து தான் ஏழை நாடாக மாறி வருகின்றது. இந்தியா ஒரு வளர்ந்து வரும் நாடு, ஒரு பெரிய வல்லரசாக வருகின்ற வரைக்கும் இந்த நாடு வளர்ந்து கொண்டு வருகின்றது. ஆகவே உலக அளவில் பாராட்டு கிடைக்க கூடிய வகையில் உலக அளவில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்ததோடு, பொருளாதாரம் மேம்பட்டு வருகின்றது. ஆகவே, நாம் எதிர்பார்த்தபடி இல்லாமல் இருந்தாலும், ஒரளவு சிறந்து விளங்குகின்றது.

ஆனால் சமீப காலமாக பெட்ரோல் டீசல் விலை உயர்வினாலும், ரூபாய் நோட்டு வீழ்ச்சியானாலும் இந்தியா தற்போது சரிவை கண்டு வருகின்றது. ஆனாலும், உலக அளவில் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் சரிவை அடுத்துதான் இந்தியாவும் அப்படியே உள்ளது.

உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி உள்ளது உண்மை தான்! அதுவே இந்தியாவிலும் உள்ளது. ஆகவே ஒரு சில திட்டங்கள் கேள்விக்குறியாக உள்ளது. ஆகவே அது மத்திய அரசின் நடவடிக்கையில் தான் அமையும்.

இந்தியாவில் உள்ள அந்தந்த மாநிலங்களின் தாய்மொழியில் கல்வி பயில வேண்டும், தமிழ்நாட்டில் தாய் மொழியான தமிழ்மொழியில் தான் திட்டங்களையும், கல்வியையும் செயல்படுத்தவேண்டும். அந்த நிலையில் தான் தற்போதைய அ.தி.மு.க அரசு செயல்படுகின்றது. ஆகவே அத்தகைய கொள்கைகளுடன் கூடியவர்களுடன் தான் நாங்கள் (அ.தி.மு.க) இணைவோம்.

மாநில அரசுக்கு மத்திய அரசு தரவேண்டிய நிதி இன்றுவரை வரவில்லை, ஆகவே தான் நான்(தம்பித்துரை) மத்திய அரசு எங்கள் (தமிழ்நாடு) மாநிலத்திற்கு தரவேண்டிய ரூ 18 ஆயிரம் கோடி நிதியை இன்றும் கேட்டு வருகின்றோம். இதற்காக, மத்தியில் மோடியை, தமிழக முதல்வர் பழனிச்சாமி ரூ 11 ஆயிரத்து 450 கோடி வரவேண்டிய நிலையில் நேரில் சந்தித்து கடிதம் கொடுத்தார்.

இதே போல தான் ஜி.எஸ்.டிக்கு வரவேண்டிய நிதியும் வரவேண்டும். ஆக மொத்தம் சேர்த்து ரூ 18 ஆயிரம் கோடி வரவேண்டி உள்ளது. ஆகவே நிதி ஆதாரம்  மத்திய அரசு கொடுக்க வேண்டியது., அந்த அரசு தராமல், மாநில அரசு எப்படி செயல்பட முடியும்?

இந்தியா ஒரு வல்லரசு நாடாக அமைய வேண்டும் என்றால், எட்டாவது அட்டவணையில் உள்ள எல்லா மொழிகளையும் செயல்படுத்த வேண்டும். தமிழ் மொழிதான் எங்கள் தாய்மொழி, இந்திக்கு நாங்கள் ஆதரவாக இருக்க மாட்டோம், இருமொழி கொள்கையை தான் ஆதரிப்போம்,. இதுவரை மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள் மக்களுக்கு புரிகின்றதா ? நாட்டு மக்களுக்கு திட்டங்களை எடுத்துச் சொல்ல வேண்டுமென்றால் திட்டங்களின் பெயர் எளிமையாக இருக்க வேண்டும்.

சர்வ சிக்‌ஷ அபியான் என்கின்ற திட்டம் அனைவருக்கும் கல்வி திட்டம். அதே நேரத்தில் 2001ல் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் போது தான் அந்த திட்டத்தினை அனைவருக்கும் கல்வி என்ற பெயரையே அறிமுகப்படுத்தியவன் நான்.

அதே திட்டத்தினை தற்போது சர்வ சிக்‌ஷ அபியான் என்கின்ற திட்டமாக கூறும் போது யாருக்கு இந்த திட்டம் புரிகின்றது? இதே போலதான் பிரைம் மினிஸ்டர் யோஜ்னா, முத்ரா யோஜ்னா ஆகிய திட்டங்களின் பெயரே பொதுமக்களுக்கு புரியவில்லை. ஆகவே தமிழ்நாட்டில் மத்திய அரசின் திட்டங்களை தமிழ்மொழியில் அறிவியுங்கள்.

இந்தி வார்த்தையே வைத்துக் கொண்டால் திட்டம் எல்லோருக்கும் புரிய வில்லை. ஆகவே, ஆளுகின்றது பா.ஜ.க ஆட்சியாக இருந்தாலும் சரி, காங்கிரஸ் ஆட்சியாக இருந்தாலும் சரி இந்தியை புகுத்தாதீர்கள்!

ஆகவே, இது போன்ற பல்வேறு போராட்டங்களை வைத்து தான் எங்களது அ.தி.மு.க இயக்கம் செயல்பட்டு வருகின்றது. தமிழ் மொழியை காத்து, தமிழ் இனத்தினை காப்பதோடு, இந்தியர்களாக நாம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

மு.க.ஸ்டாலின் – சந்திரபாபு நாயுடு சந்திப்பு குறித்து சொல்வதென்றால்… ஸ்டாலின் இன்று சந்திரபாபு நாயுடுவிடம் பேசினார். நாளை மோடியிடமும் பேசுவார்! அரசியலில் எதுவும் நடக்காலாம். மோடியை விட ஸ்டாலின் நல்லவர் என்று சந்திரபாபு நாயுடு கூறி இருப்பது நகைச்சுவை! 4 ½ வருடங்களாக மோடி நல்லவராக சந்திரபாபு நாயுடுவுக்கு இருந்த நேரத்தில் தற்போது ஸ்டாலின் நல்லவரா? அதே நேரத்தில் 4 ½ வருடங்களாக எதிர்த்த மோடி அரசின் அமித்ஷாவை அழைத்து கருணாநிதிக்கு நினைவேந்தல் நடத்தியதுடன் ஓர் இணக்கத்தினை ஏற்படுத்திக் கொண்டார்!

அப்போது பா.ஜ.க இந்துத்துவா என்று தெரியாதா? ஆகவே இதில் யார் நல்லவர் ? யார் கெட்டவர் ? என்பதை அவர்கள் தான் கூறிக் கொள்ள வேண்டும். நாம் கூறமுடியாது!

சந்திரபாபு நாயுடுவின் முயற்சி நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றியை கொடுக்கும் என்று வை.கோ கூறி இருப்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால்…  இதே வை.கோ தான் மோடி ஜெயிப்பதற்காக தேர்தல் உடன்பாடு வைத்து, மோடி வெற்றி பெற வேண்டி தெருத் தெருவாக அலைந்தார்! காங்கிரஸ் கூட்டணி ஒழிய வேண்டும்,. காங்கிரஸ் கட்சி ஒழிய வேண்டுமென்று கூறி, காங்கிரஸ் கட்சியினால் தான் சிங்களத் தமிழன் கொல்லப்பட்டான் என்று காங்கிரஸ் கட்சியினை கடுமையாக சாடியவர்தான் வை.கோ.,

அதே வை.கோ தான், மோடியுடன் உடன்பாடு வைத்து தேர்தல் பணியாற்றியவர். மோடி வெற்றி பெறுவதற்கு வை.கோ வும் ஒரு காரணம். அவர் அதை மறுக்கட்டும் பார்ப்போம்..! அதே போல தான் திராவிட முன்னேற்றக் கழகம் தோற்பதற்கும் வை.கோ தான் காரணம்! ஏனென்றால் மக்கள் நலக் கூட்டணி என்று மூன்றாவது அணி வைத்துக் கொண்டு திமுக.,வைத் தோற்கடித்தார். ஆகவே ஸ்டாலினுக்கு வை.கோ மீது கோபம் உள்ளது என்பதை என்று காண்பிக்க உள்ளரோ?! நிச்சயம் காண்பிப்பார்!

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...