இன்று நள்ளிரவு கரையைக் கடக்கிறது கஜா புயல்! நாகையில் 3ம் எண் கூண்டு!

சென்னை: மத்திய தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிற கஜா புயல், இன்று இரவு 11.30க்கு நாகை அருகே கரையை கடக்கிறது!

தற்போது, நாகப் பட்டினத்தில் இருந்து 300 கி.மீ தொலைவில் கஜா புயால் மையம் கொண்டுள்ளது. கஜா புயல் கரையைக் கடக்கும் போது சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இன்று காலை 9.30 நிலவரப்படி கஜா புயல் நாகையில் இருந்து 300 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்தது. கஜா புயல் தீவிர புயலாக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

கஜா புயலால், தஞ்சை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம்! மணிக்கு 21 கி.மீ. வேகத்தில் கஜா புயல் நாகையை நோக்கி நகர்கிறது என்றும், 25 கி.மீ நீள் வட்ட அளவில் கஜா புயல் நாகையை நெருங்கி வருவதாகவும் தகவல் வெளியானது.

இதனிடையே நாகை துறைமுகத்தில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.