மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசு நாளை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறது!

சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் நாளை மனு தாக்கல் செய்யவுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் நாளை தாக்கல் செய்ய தயாரிக்கப்பட்டுள்ள மனுவிற்கு தமிழக அரசின் சட்டத்துறை ஒப்புதல் பெற்றுள்ளது. இதையடுத்து மேகதாது அணைக்காக வரைவுத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை எதிர்த்து தமிழக அரசு நாளை மனு தாக்கல் செய்யவுள்ளது.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் சுமார் ரூ.5,192 கோடி மதிப்பீட்டில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டது. இது தொடர்பான செயல் திட்ட வரைவு அறிக்கையை மத்திய நீர்வளத் துறை ஆணையத்தில் கேரள அரசு தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில் இந்த திட்டத்திற்கான ஒப்புதலை மத்திய நீர்வளத்துறை ஆணையம் சில நாட்களுக்கு முன் வழங்கியது. இதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ள தமிழக அரசு, இறுதி அறிக்கைக்கு ஒப்புதல் பெறுவதைத் தடுக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என தெரிவித்துள்ளது.

இதை அடுத்து மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்க கூடாது என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதினார்.

இந்நிலையில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் நாளை மனு தாக்கல் செய்ய உள்ளது!