லயோலா… எரிச்சலுக்கு சந்தனம் பூசவில்லை; சுண்ணாம்பு தடவியிருக்கிறது!

“இந்துக்களின் எரிச்சலுக்கு _ மனவேதனைக்கு அரைத்த சந்தனத்தைப் பூசவில்லை, மாறாக சுண்ணாம்பு பூசி இருக்கிறது என்று, லயோலா கல்லூரி மன்னிப்பு குறித்து இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ராம.ரவிக்குமார் கூறியுள்ளார்.,

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
சென்னை லயோலா கல்லூரியில் கடந்த 19 20 ஆகிய இரண்டு தினங்களில் லயோலா மாணவர் அரவணைப்பு மையம் மற்றும் லயோலா கல்லூரி மற்றும் மாற்று ஊடக மையம் ஆகியவை இணைந்து கருத்துரிமை நிலைநாட்ட கலைஞர்கள் பங்கேற்ற விருது விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு ஒருங்கிணைப்பாளராக இருந்து நாட்டுப்புற கலைஞர்கள் எல்லாரையும் கௌரவப் படுத்துகிறேன் என்ற பெயரில் கடந்த ஆறு ஆண்டுகளாக நாட்டுப்புற கலைஞர்கள் உடைய சிந்தனையில் நாட்டு விரோத, தேசவிரோத சிந்தனைகளை தேசத்திற்கு எதிராகவும், தெய்வத்திற்கு எதிராகவும், இந்து மதத்திற்கு எதிராகவும் “சிந்தனை சிதைப்பு வேலையை ” செய்து கொண்டிருப்பவர்தான் காளீஸ்வரன் என்பவர்.

இவர் இந்தக் கல்லூரியின் கலைப்பிரிவு தலைவராக இருந்து செயல்பட்டு வருகிறார்.

இவர் மாற்று ஊடக மையம் என்ற பெயரில் இதுபோன்ற தமிழர் மண் சார்ந்த கலைஞர்களை வரவழைத்து அவர்களுக்கு கௌரவ படுத்துகிறேன் என்று மெல்ல மெல்ல அந்நிய மதத்தை உள்ளூரப் புகுத்துகிறார்.

மத்திய மாநில அரசினுடைய நிதி உதவிகளைப் பெற்றுக்கொண்டு அரசினுடைய திட்டங்களை வீதி நாடகங்கள், ஓரங்க நாடகங்கள், கலைக் கூத்து நிகழ்ச்சிகள் என தமிழகம் முழுக்க இந்த நாட்டுப்புற கலைஞர்களை வைத்து செயல்படுத்திக் கொண்டு வருபவர்.

அவ்வாறு அரசுப் பணத்தை பெற்றுக்கொண்டு செய்தாலும்கூட அரசு விரோதமாக இவர்கள் செய்யக்கூடிய இதுபோன்ற நிகழ்வுகளுக்கு பணம் கொடுக்கக் கூடிய அரசோ எந்தக் கண்காணிப்பையும் மேற்கொள்வது இல்லை.

அதன் உச்சம்தான் தற்போது நவீன ஓவியம் என்கின்ற பெயரில் நாசகார சக்தி முகிலன் என்பவர் வரைந்த ஓவியங்களை காட்சிப் படுத்தி இருக்கிறார்.

படங்கள் வைக்கத்தான் அனுமதி கேட்டார்கள் , என்ன படம் வைக்கப் போகிறார்கள் என்பது எங்கள் கவனத்திற்கு வரவில்லை என்று சொல்லிவிட்டு, இதுபோன்று இந்து மத விரோதமாக தெய்வ விரோதமாக தேச விரோதமாக அரச விரோதமாக பொது மக்கள் போராட்டங்கள் வெளிப்படுத்துகிறோம் என்கின்ற பெயரில் கருத்துரிமை போர்க்களமாக தமிழகத்தை மாற்றத் திட்டமிட்டு செயல்பட்டு… எதிர்ப்புகள் வந்ததும் மன்னிப்பு கேட்பது போல் ஒரு அறிக்கை வெளியிட்டு நாங்கள் மன்னிப்பு கேட்டு விட்டோம் என்று பாசாங்கு நாடகத்தை பாதிரியார்கள் நடத்தக்கூடிய கிறிஸ்தவ லயோலா கல்லூரி அரங்கேற்றியிருக்கிறது

சரி.. இந்த இரண்டு நாள் நடைபெற்ற கருத்தரங்குகளில் இடம்பெற்ற படங்கள் இவர்கள் கண்களில் படாமல் போனது விந்தையிலும் விந்தை! அரிச்சந்திரன் விருதை இவர்களுக்கு கொடுக்க வேண்டும்!

இதில் கலந்து கொண்ட பெருமக்கள் யாரென்று பார்த்தால் … சுந்தரவல்லி, சேலம் வளர்மதி கல்வியாளர் என்ற பெயரில் இந்துமத வெறுப்புகளை சொல்லக்கூடிய பிரின்ஸ் கஜேந்திரபாபு, நாட்டை பிரிப்போம் இந்தியா என்கின்ற நாடே கிடையாது தமிழ்நாடு தனி தேசியம் என்று நாள்தோறும் பிரிவினை பேசக்கூடிய மே-17 – திருமுருகன் காந்தி, எல்லை கடந்த தேசபக்தர்கள் கம்யூனிஸ்டுகள் முத்தரசன், அருள்மொழி புரட்சிக் கருத்துக்கள் பேசுகிறேன் என்கின்ற பெயரில் இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் அரசு பணியில் இருந்து கொண்டு இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்ட அரசு அதிகாரிகள், இதுபோன்று பலர் கலந்துகொண்டு பேசிய பேச்சுக்களை தேசிய புலனாய்வு நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

இங்கே கலந்து கொண்ட நபர்கள் அவர்கள் பின்னணி குறித்து முழு அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். லயோலா கல்லூரி தமிழகத்தில் பொது அமைதிக்கு பாதிப்பு உண்டாக்குகின்ற வகையில் பல்வேறு போராட்டங்களை தூண்டிவிடக்கூடிய வேலையை தொடர்ந்து செய்து கொண்டு வருகிறது என்பதற்கு பல உதாரணங்களை கூறமுடியும் .

அவை அனைத்தும் அரசினுடைய உளவுத்துறைக்கு நன்றாகவே தெரியும். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டம், நெடுவாசல் போராட்டம் கதிராமங்கலம் போராட்டம், நியூட்ரினோ எதிர்ப்பு போராட்டம், எட்டு வழிச்சாலை எதிர்ப்பு போராட்டம்…. இன்னும், ஜல்லிக்கட்டு வேண்டும் என்று நடந்த மெரினா போராட்டத்தில் பொதுமக்களுடன் புகுந்து போராட்டத்தை கலவரமாக மாற்றியது யார் என்று பல்வேறு போராட்டங்களுக்கு திட்டமிட்டு செயல் வடிவம் கொடுக்க கூடிய ஒரு சதித்திட்டம் தீட்டும் கல்லூரியாக இந்தக் கல்லூரி செயல்பட்டு வருகிறது என்பது கடந்த கால வரலாறு.

சிறுபான்மை அந்தஸ்து பெற்று இயங்கும் இந்தக் கல்லூரி இந்த அந்தஸ்துக்கான சட்ட விதிமுறைகளை பின்பற்றவில்லை. இது குறித்து சிறுபான்மை ஆணையமும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது .

இதற்கெல்லாம் மேலாக இந்த விழாவில் பங்கேற்ற மாண்புமிகு அமைச்சர் பாண்டியராஜன் எந்தவிதமான பதிலும் கூறாமல் மௌனம் சாதிப்பது இந்த தேச விரோதிகளின் குரலுக்கு இவரும் ஒத்திசைந்து பாடுகிறாரா? என்ற சந்தேகத்தை இந்துக்களுக்கு தேசபக்தர்களுக்கு உண்டாக்குகிறது.

அதுமட்டுமல்ல சமீபத்தில் திருச்சியில் செயின்ட் ஜோசப் கல்லூரியில் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஆய்வுக் கட்டுரைகள் வாசிப்பது என்று தமிழ் இலக்கியங்களில் பெண்களுக்கு எதிரான வக்கிரமான கருத்துக்களை ஆய்வுக்கட்டுரைகளாக மாற்றி தவறுகளை ஆவணப்படுத்த முயற்சித்த பொழுது இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் அளித்து, கண்டனம் தெரிவித்து, நிறைவாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்த காரணத்தால் அந்த கருத்தரங்கம் நிறுத்தப்பட்டது என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும்.

அதுபோல இங்கே நடைபெற்ற திட்டமிட்ட “நாட்டுப்புற கலைஞர்களின் சிந்தனை சிதைப்பு திருவிழா ” தடை செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் கடுமையான எதிர்ப்பின் காரணமாக மன்னிப்பு கேட்டதாக ஒரு மாய வார்த்தையைக் கூறி இருக்கிறது.

இந்தக் கல்லூரியில் வேலை செய்யக்கூடிய காளீஸ்வரன் என்பவரை வைத்து கண்காட்சியில் இடம்பெற்ற படங்கள் இந்துக்கள் தேசபக்தர்கள் தெய்வ நம்பிக்கை அவர்களுடைய மனதில் ஆறாத காயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு இவர்கள் வெளியிட்ட அறிக்கை, எரிச்சலுக்கு அரைத்த சந்தனத்தை பூசுவதாக தெரியவில்லை; சுண்ணாம்பு வைத்து பூசுவது போல நாங்கள் கருதுகிறோம்.

அரசு இந்தக் கொடும் செயலை செய்த ஓவியர் மற்றும் இதனை ஏற்பாடு செய்த ஏற்பாட்டாளர்கள் கல்லூரி நிர்வாகத்தின் மீது வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுத்து கல்லூரிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்து, லயோலா கல்லூரி தேச விரோதிகளின் கூடாரம் என்பதை உலகறிய செய்தால் மட்டுமே சரியான தீர்வாக இருக்கும்.

இது ஒவ்வொரு தேசபக்தர்களின் எதிர்பார்ப்பு! மாற்று ஊடக மையம் என்ற பெயரில் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தேசவிரோத, தெய்வ விரோத கருத்துருவாக்கம் செய்வதுபோல சென்னையில் லயோலா கல்லூரி செயல்பட்டுக் கொண்டு வருகிறது.

இதை அரசு எப்பொழுதும் தீவிர கண்காணிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் அது தமிழ் நாட்டிற்கும் பாரத தேசத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும் என்பது மாறாத உண்மை…. – என்று குறிப்பிட்டிருக்கிறார்!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.