வேண்டும் என்றால் மாறன் சகோதரர்களை சிறையில் அடைத்து விசாரிக்கலாம் என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால், மாறன் சகோதரர்களை சிறையில் அடைத்து விசாரிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தி அரசுக்கு ரூ.1.78 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்தது. இந்தக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி மாறன் சகோதரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

மாறன் சகோதரர்களின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், குற்றச் சாட்டைப் பதிவு செய்திருக்கும் சிபிஐ, விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று சிபிஐ தரப்பு கூறுவதால், மாறன் சகோதரர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தப் பட வேண்டும் என்றும், தேவைப்பட்டால் தயாநிதி மாறன், கலாநிதி மாறனை சிறையில் அடைத்தும் கூட விசாரிக்கலாம் என்றும் கூறியுள்ளது.

சிபிஐ., தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த வழக்கை மாறன் சகோதரர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்றும், 4 மாதத்துக்குள் இந்த வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னர் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சன் டிவிக்கு பி.எஸ்.என்.எல். கண்ணாடி இழை அதிவேக தொலைபேசி இணைப்புகளை அளித்து, அரசுச் சொத்தினை முறைகேடாகப் பயன்படுத்தினார் என்று குற்றம் சாட்டப்பட்டது.

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு இத்தகைய சட்ட விரோத தொலைபேசி இணைப்புகள் மூலம் ரூ.1.78 கோடி இழப்பு ஏற்படுத்தினார்கள் என்று முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரரும் சன் டிவி உரிமையாளருமான கலாநிதி மாறன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதையும் படியுங்க…

சன் டிவியை ஒழிக்க முயல்கிறார்கள்: கலாநிதி மாறன்

விடாமல் துரத்தும் சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு! மாறன் சகோதரர்கள் மனு தள்ளுபடி!

இதை அடுத்து, இந்த மோசடி தொடர்பாக மாறன் சகோதரர்கள் மற்றும் பி.எஸ்.என்.எல். பொது மேலாளராக பதவி வகித்த கே.பிரம்மநாதன், அந்நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் வேலுச்சாமி, தயாநிதி மாறனின் தனிச் செயலாளரான கெளதமன், சன் டிவி ஊழியர்களான கண்ணன், ரவி ஆகிய 7 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரையும் விடுவித்தது. இதனை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரை விடுவித்து சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது!

மேலும், வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப் பட்டு, மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி இந்த வழக்கு விசாரணை சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.முன்னதாக மாறன் சகோதரர்கள் இந்த வழக்கின் குற்றச்சாட்டு பதிவுக்காக ஆஜராவதிலிருந்து விலக்குஜ் அளிக்கக் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், குற்றச்சாட்டு பதிவுக்காக விசாரணை நீதிமன்றத்தில் மாறன் சகோதரர்கள் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதை அடுத்து இந்த வழக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஆர்.வசந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாறன் சகோதரர்கள், கே.பிரம்மநாதன், வேலுச்சாமி, கெளதமன், கண்ணன், ரவி 7 பேரும் ஆஜர் ஆனார்கள். அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 பேருக்கும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தனித்தனியாக வாசித்துக்காட்டி அவற்றைப் பதிவு செய்தார் நீதிபதி.

அப்போது தன் மீதான குற்றச்சாட்டுக்களை தயாநிதி மாறன் மறுத்தார். இந்த வழக்கில் சிபிஐ தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டு புனையப்பட்டவை என்றும், தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தினேன் என்பதை நிரூபிக்கும் வகையில் சிபிஐ போதுமான ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்றும் கூறினார்.

மேலும், யூகத்தின் அடிப்படையில் சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படை ஆதாரமற்றவை என்று கூறி மறுத்தார்.

கலாநிதி மாறனும், சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டு ஆவணங்களில் ஒரு இடத்தில் கூட தன் பெயர் இடம்பெறவில்லை என்றும், அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதே போல் மற்றவர்களும் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்தனர். இந்த நிலையில், சிபிஐ., தரப்புக்கு சாதகமாக உத்தரவு பிறப்பித்த நீதிபதி, விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார்கள் எனும் பட்சத்தில், வேண்டுமென்றால் அவர்களைக் கைது செய்து விசாரிக்கலாம் என்று கூறினார்.

மத்திய சென்னை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தயாநிதி மாறனை கைது செய்து விசாரிக்கலாம் என்று உத்தரவிட்ட நீதிபதியின் இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரதமர் மோடியின் சௌகிதார் - காவல்காரன் என்ற இயக்கம்!

View Results

Loading ... Loading ...

 

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...