முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் அமமுக.,வில் இருந்து விலகி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
அதிமுக.வில் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருந்த தாமரைக்கனியின் மகன் இன்பத்தமிழன் 2001-ஆம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்தார்.
இந்நிலையில் 2006-ஆம் ஆண்டு திமுக.,வில் இணைந்த இவர் 2009-ஆம் ஆண்டில் மீண்டும் அதிமுக.,வில் இணைந்தார்.
இந்நிலையில் அமமுக.,வில் இருந்த இன்பத்தமிழன் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக.,வில் இணைந்தார். அப்போது அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள தகவல்..
கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழக முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று, அமமுக கட்சியிலிருந்து விலகிய விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திரு.RT இன்பத்தமிழன் அவர்கள் நேரில் சந்தித்து கழகத்தில் அடிப்படை உறுப்பினராக இணைந்தார். #AIADMK pic.twitter.com/gbJj3TgaVo
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) June 11, 2019