Explore more Articles in
தமிழகம்
கூவம் நதியை சீரமைக்க ரூ.605 கோடி ஒதுக்கியது தமிழக அரசு
சென்னை:
கூவம் நதி சீரமைப்புத் திட்டத்துக்கு ரூ.605 கோடியை ஒதுக்கியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசு, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நீர் நிலைகளை சீரமைத்திட அனைத்து சார் துறைகளுடன் ஒருங்கிணைந்து செயலாற்றும் பணியை சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் மேற்கொண்டுவருகிறது. கூவம் நதியை முழுமையாகச் சீரமைத்து மீட்டெடுப்பதற்கான ஒரு பெரும் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தை, ‘சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை’ ஒருங்கிணைப்பு அமைப்பாக இருந்து செயல்படுத்தும் என்று 2014- 2015 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
நடிகர் சிவாஜிக்கு மணிமண்டபம்: அக்டோபரில் பணி தொடங்கும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
சென்னை:
நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டும் பணி அக்டோபர் மாதம் தொடங்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.