Home அடடே... அப்படியா? விமானம் தரையிறங்கும் போது… என்ன நடக்கும்?!

விமானம் தரையிறங்கும் போது… என்ன நடக்கும்?!

main-plane-tyre
main plane tyre

ஓடுபாதையில் விமானம் தரையிறங்கும் இறங்கும்போது சற்று தூரத்திற்கு டயர் தேய்த்துக் கொண்டே போகும் என்கிறார்களே. அப்பொழுது டயர் பஞ்சர் ஆகாதா? டயர் வெடித்தால் என்ன ஆகும்? இப்படிப்பட்ட விபத்துகள் நம் நாட்டில் நடந்துள்ளதா?

விமானம் தரையை தொடும் போது அதுவரை விமானத்தின் எடையை இறக்கை தாங்கிக் கொண்டிருந்ததிலிருந்து சக்கரங்களுக்கு சிறிது சிறிதாக மாறும்.

உதாரணத்திற்கு 75 டன் எடையுள்ள விமானம் தரையை தொடும் வினாடியில் 5 டன் தான் சக்கரத்திற்கு மாறும். அந்த வினாடியில் அதுவரை சுழாலாமல் இருந்த சக்கரம் , விமானத்தின் வேகத்தின் அளவிற்கு திடீரென்று சுழல ஆரம்பிக்கும். அடுத்த நான்கு அல்லது ஐந்து வினாடிக்குள் எடை முழுவதும் சக்கரத்திற்கு மாறி விடும்.

main plane tyre2

இங்கே தான் விமானியின் திறமை வெளிப்படும். விமானத்தின் வேகம், இயந்திரத்தின் சக்தியின் அளவு, விமானம் இறங்கும் கோணம் மற்றும் விமானம் கீழ்நோக்கி இறங்கும் வேகம் ( vertical speed) என்று பல காரணிகள் உள்ளன.

விமானம் மிருதுவாக தரையில் இறங்குவது என்பது முன் கூறிய 5 வினாடிக்கு குறையாமல் இருந்தால் நடைபெறும். அப்போது டயரில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

ஒரு விமானம் 2 வினாடிகளிலில் முழு எடையையும் சக்கரத்திற்கு மாற்றினால் ( Dropped) டயரில் பாதிப்பு ஏற்பட்டு தேய்ந்து விடும்.

main plane tyre1

டயர் தீடிரென தேய்வதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

1 . விமானத்தின் எடை குறுகிய காலத்தில் வேகமாக சக்கரத்திற்கு மாறும் போது.

2 . விமான சக்கரம் தரையை தொட்டவுடன் வேகமாக விமானத்தின் வேகத்திற்கு ஏற்ப சுழல ஆரம்பிக்கும். பின் விமானி வேகத்தை குறைக்க பிரேக் உபயோகிப்பார்.

அப்போது சக்கரம் விமானத்தின் வேகத்தை விட குறைவாக சுழலும். அப்போது டயரில் தேய்தல் ஏற்படும்.இதை சறுக்குதல் ( skid) என்று கூறுவார்கள். இந்த சறுக்குல் ஓரளவிற்கு தான் இருக்கவேண்டும். அதிகமானால் தேய்வும் அதிகமாகும்.மேலும் வெடிக்கவும் வாய்ப்பு உண்டு.

விமானத்தில் இதற்காகவே ஆண்டிஸ்கிட் (Antiskid) என்ற அமைப்பு உள்ளது. அதைப் பற்றிய விளக்கத்தை தனியாக பதிவு செய்கிறேன்.

மகிழுந்திலும் இவ்வமைப்பு உள்ளது. இதைத்தான் ஏபிஸ் (ABS -antilock braking system ) என்று கூறுப்படுகிறது.

இந்த ஆண்டிஸ்கிட் பழுது ஏற்பட்டாலும் டயர் தீடிரென தேயும். டயர் வெடிக்கவும் செய்யும். டயர் விபத்தைப் பற்றி சுவாரிசயாமான என்அனுபவத்தை தனி பதிலாக கூறுகிறேன்.

மேலே விளக்கத்தில் கூறப்பட்ட அளவுகள் ( 5 வினாடி போன்றவை) சாதாரண மக்களும் புரிந்து கொள்ள என்னால் கூறப்பட்ட அளவாகும்.

விமானம் தரையில் இறங்கும் போது டயர் தேயும். ஆனால் தேய்த்துக்கொண்டே போகாது. மேற்கூறிய விமானியின் திறமை மற்றும் அண்டிஸ்கிட்டில் குறைபாடு காரணங்களால் தேயவும், தேய்ந்து கொண்டே சென்று வெடிக்கும் வாய்ப்பு உண்டு.

  • முகுந்தன் நடராசன்

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version