Home அடடே... அப்படியா? ஆக்சிஜன்… ஆக்சிஜன்… ஆக்சிஜன்… இந்த முன்னாள் அதிகாரி சொல்றதை கேளுங்க!

ஆக்சிஜன்… ஆக்சிஜன்… ஆக்சிஜன்… இந்த முன்னாள் அதிகாரி சொல்றதை கேளுங்க!

oxygen cylinder
oxygen cylinder

இந்தியாவின் சில மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை என்று அரசியல் செய்து கொண்டிருக்கும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை என்பது வெறும் கட்டுக்கதையா அல்லது, நிதர்சனமான உண்மையா என்பது குறித்து அறிந்து கொள்ளும் வகையில் விளக்கியிருக்கிறார் ஒரு முன்னாள் அதிகாரி. இவரது விளக்கம் இப்போது, ஆக்சிஜன் குறித்த சமூக அரசியல் சமாசாரத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.

ஹனுமான் மால் பெங்கனி லிண்டே இந்தியாவின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஹனுமான் மால் பெங்கனி பகிர்ந்துள்ள ஒரு செய்தி…

லிண்டே இந்தியாவின் மிகப்பெரிய ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஒன்று. அவரின் தகவல் …

“ஆக்ஸிஜன் துறையில் 45 ஆண்டுகளாக எனது வாழ்நாளைக் கழித்ததோடு, இந்தியாவில் 50% உற்பத்தித் திறன்கொண்ட ஆக்சிஜன் பிளாண்ட்களை அமைப்பதில் ஈடுபட்டுள்ளேன் (லிண்டேவின் வணிகத் தலைவராக) நான் சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள முடியும், இது உங்கள் சில எண்ணங்களை மாற்றக்கூடும். முதலில் சில உண்மைகள்

1) தொழில்துறை மற்றும் மருத்துவ ஆக்ஸிஜன் இரண்டுமே ஒரே ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு, ஒரே தொட்டிகளில் சேமிக்கப்பட்டு, ஒரே சிலிண்டர்களில் நிரப்பப்படுகின்றன. மருத்துவ ஆக்ஸிஜனைப் பொறுத்தவரை, உற்பத்தி நிறுவனம் ஒவ்வொரு சிலிண்டரையும் பகுப்பாய்வு செய்து சான்றளிக்க வேண்டும். இதைத் தவிர வேறு எந்த வித்தியாசமும் இல்லை. உண்மையில் தொழில்துறைக்கு அனுப்பப்படும் ஆக்சிஜன் 99.5% தூய்மையாகத் தேவைப்படுகிறது, மருத்துவ பயன்பாட்டுச் சிலிண்டர் 93 +- 3% தூய்மையாக இருக்க வேண்டும்.

2) இந்தியாவில் ஆக்ஸிஜன் உற்பத்தியில் முற்றிலும் பற்றாக்குறை இல்லை. ஆக்ஸிஜன் உற்பத்தி திறனில் ஒரு விழுக்காட்டிற்க்கும் குறைவானத அளவே மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். கொரோனா காலங்களில் கூட இது மூன்று மடங்கு அல்லது 5% வரை செல்லக்கூடும். ஆனால் பயன்பாடு இவ்வளவுதான்.

3) இந்தியாவில் மொத்த ஆக்ஸிஜன் உற்பத்தி திறன் ஒரு நாளைக்கு 1,00,000 டன் என்று நான் நினைக்கிறேன். (அல்லது அதிகமாகவும் இருக்கலாம்) மேலும் ஆக்ஸிஜன் உற்பத்தி திறன் 80% எஃகு நிறுவனங்களிடம் உள்ளது, அங்கு ஆக்ஸிஜன் வாயு உற்பத்தி செய்யப்பட்டு இரும்பு தயாரிப்பு மற்றும் எஃகு தயாரித்தலில் பயன்படுத்தப்படுகிறது. ஆம், ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு நாளைக்கு 22000 டன் கொள்ளளவு கொண்ட்து.

3) ஆக்சிஜன் தயார் செய்யும் தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை கிழக்கு இந்தியாவில், சில மேற்கில் (மும்பை மற்றும் குஜராத்) மற்றும் சில கர்நாடகாவில் உள்ளன. இந்தத் தொழிற்சாலைகள் பொதுவாக 5-10% உற்பத்தியை திரவமாக உற்பத்தி செய்கின்றன, அவை பெரிய தொட்டிகளில் சேமிக்கப்படுகின்றன. இந்த திரவம் ஆலையின் உற்பத்தித் திறன் குறையும்போது பயன்படுத்தப்படுகிறது.

4) லிண்டே மற்றும் இன்னாக்ஸ் போன்ற வாயுக்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்குச் சொந்தமான பல திரவ ஆக்ஸிஜன் ஆலைகள் உள்ளன, அங்கு அவை திரவ ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு டேங்கர்கள் மற்றும் டாங்கிகள் மூலம் விற்கின்றன.

5) நாடு முழுவதும் உள்ள பல மறு நிரப்பிகள் வாயு உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து திரவத்தை வாங்குகின்றன மற்றும் திரவத்தை ஆவியாக்கிய பிறகு எரிவாயு சிலிண்டர்களை நிரப்புகின்றன

6) ஆக்ஸிஜன் பொதுவாக மூன்று வழிகளில் இறுதி பயனருக்கு வழங்கப்படுகிறது. 80% தயாரிப்பு என்று கூறப்படும் ஆலை முதல் இறுதி பயனர் வரை நேரடியாக குழாய் வழியாக. 15% அல்லது அதற்கு மேற்பட்டவை திரவ வடிவில் டாங்கிகள் மற்றும் டேங்கர்கள் மூலமாகவும் 5% க்கும் குறைவான சிலிண்டர்கள் மூலமாகவும் வழங்கப்படுகின்றன

இன்று நாம் ஏன் நெருக்கடியை எதிர்கொள்கிறோம்? கீழே தரப்பட்டுள்ள காரணங்களின் சேர்க்கை என்று நினைக்கிறேன்

1) ஆக்சிஜனை விநியோகம் செய்வதில் தேவைப்படும் கலன்களின் பற்றாக்குறை அதாவது சாலை டேங்கர்கள், சேமிப்பு தொட்டிகள் மற்றும் சிலிண்டர்கள். இவை விலை உயர்ந்தவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒவ்வொரு சாலை டேங்கருக்கும் 45 லட்சம் செலவாகும், ஒரு சிலிண்டருக்கு 10,000 செலவாகும், இதில் நீங்கள் ரூ 300 மதிப்புள்ள ஆக்ஸிஜனை விற்கிறீர்கள். இந்த கொள்கலன்கள் சாதாரண நேரங்களின் அடிப்படையில் எரிவாயு நிறுவனங்களிடம் உள்ளன.

2) அடுத்த விஷயம் தளவாட மேலாண்மை. பெரும்பாலான தொழிற்சாலைகள் ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியில் அமைந்துள்ளன. எனவே விநியோக உபகரணங்கள் மூலம் ஆக்சிஜன் வாடிக்கையாளருக்குச் செல்ல 200-1000 கி.மீ தூரம் பயணிக்கின்றன. இப்போது நல்ல சாலைகளுடன் கூட ஒரு டேங்கர் ஓரிடத்திலிருந்து வேறு ஓர் இடத்திற்குப் பயணம் செய்ய 7-10 நாட்கள் ஆகும்.

3) எரிவாயு நிறுவனங்கள் தங்கள் லாபத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதுதான் வியாபாரம்.

4) கடைசியாக இந்த அலை அவ்வளவு விரைவாக வந்தது, வரவிருக்கும் இந்த ஆபத்தை அவர்கள் நினைத்து தயார் செய்திருந்தால், ஒரு பெரிய நெருக்கடியைத் தவிர்க்க முடியும். ஆனால் எங்கள் ஜனநாயக அமைப்பை அறிந்து கொள்வதை விட இது எளிதானது.

oxygen

இப்போது அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பின்னோக்கிப் பார்த்தால், அரசாங்கம் திட்டமிட்ட பின்பற்றல்களைக் கொண்டிருக்கலாம்

1) அனைத்து விநியோக உபகரணங்களையும் மருத்துவ நோக்கத்திற்காக தீவிரம் அதிகமான முதல் நாளிலிருந்து பயன்படுத்த உற்பத்தி நிறுவனங்களுக்கு கடுமையான ஆலோசனை வழங்கியிருக்கலாம். உணவு தானியங்களுக்கான எம்.எஸ்.பி போலவே எரிவாயு நிறுவனங்களுக்கும் அவர்கள் இழப்பீடு வழங்க முடியும்.

2) அனைத்து தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும் ஆலை/ தொட்டியிலிருந்து ஒரு சொட்டு திரவ ஆக்ஸிஜனை நிரம்பும் வரை ஆக்சிஜனை வேறு செயல்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தலாம்.

3) பிரத்யேக இரயில் வசதியைப் பயன்படுத்தலாம்.

4) அனைத்து மருத்துவமனைகளிலும் பி.எஸ்.ஏ (Pressure Swing Adoption) அமைப்புகளை நிறுவியிருக்கலாம். அனைத்து மாவட்ட மருத்துவமனைகளுக்கும் பிரதமர் அலுவலகம் ரூ 200 கோடி அறிவித்தது, அவற்றில் சுமார் 500 ஆலைகள் அமைத்திருக்கலாம். வழக்கமான பொதுத்துறை டெண்டரிங் செயல்பாட்டில் 15% கூட பயன்படுத்தப்படவில்லை

5) பெரிய மருத்துவமனைகளின் தலைமை நிர்வாக அதிகாரிகளிடமும் சமமான பொறுப்பு இருக்கிறது. அவர்கள் பொதுமக்களிடமிருந்து இவ்வளவு பெரிய பணத்தை வசூலிக்கும்போது, அவர்கள் அவற்றை நன்கு திட்டமிட்டிருக்க வேண்டும். எதற்காக அவர்கள் அதிகமாக சம்பளம் மற்றும் போனஸ் பெறுகிறார்கள்.

இந்த நெருக்கடி முடிந்ததும், பெரிய மருத்துவமனைகளின் தலைமை நிர்வாக அதிகாரி, சில தலைவர்களை அவர்களது தவறான திட்டமிடலுக்காக பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

  • தமிழில்: முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version