October 26, 2021, 11:34 pm
More

  ARTICLE - SECTIONS

  எதிர்கால பாதுகாப்புக்காக… ட்ரோன் தொழில்நுட்பத்தில் சாதிக்கும் இந்தியா!

  வர்த்தக நோக்கில் உலக அளவில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திட கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

  drones1 - 1

  இரண்டு உலக சாதனைகள். ஒன்று சீனா. மற்றொன்று இந்தியா.
  இரண்டுமே சாதித்திருப்பது தனியார் துறை நிறுவனங்கள். ஆனால் இதில் இந்தியா உலகத்தவர் அனைவரையுமே மூக்கில் விரல் வைக்க செய்திருக்கிறது.

  இன்றைய தேதியில் இந்த உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தல் ட்ரோன்கள் தான். ஆரம்பகாலத்தில் கண்காணிப்பு பணிகளுக்கு பயன் படும் என்று நம்பியவர்கள் இது பிற்காலத்தில் தாக்குதலுக்கு பயன் படுத்த முடியும் என்கிற நிலை வரும் போது தான் இதன் வீரியத்தை உணர்ந்தனர்.

  ட்ரோன்கள் பல ரகங்கள் இருக்கின்றன. இது வேறு…. ஆளற்ற விமானங்கள் வேறு. நம்மவர்கள் இது இரண்டையும் போட்டு குழப்பிக் கொள்கிறார்கள்.

  ஆளற்ற விமானங்கள் உச்ச கட்ட தொழில்நுட்பம் அமெரிக்க லாக்ஹீட் மார்டீன் நிறுவனத்தின் தயாரிப்பு #RQ_9.

  drones2 - 2

  இதன் மதிப்பு 280 மில்லியன் டாலர்கள். இந்த உலகின் அதி உச்ச செலவில் பறக்கும் ஆளற்ற விமான ரகம் இது தான்.

  இதற்கு அடுத்ததாக வருவது #MQ_9 ரீப்பர் ரகம். மேற்சொன்ன RQ 9க்கு பத்தில் ஒரு பங்கு இந்த MQ 9. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஈரானிய ராணுவ தளபதி க்வாஸிம் சொலைமானியை அமெரிக்கா அடித்து வீழ்த்தியது இந்த ரக விமானத்தை கொண்டு தான். அவ்வளவு துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள லென்ஸ் அவ்வளவு மதிப்பு மிக்கது… செயற்கைக்கோள்களில் நட்சத்திர மண்டலத்தினை கண்காணிக்க உருவாக்க பட்டது…… 36,000 ஆடி உயரத்தில் இருந்து தரையில் 1 சென்டிமீட்டர் அளவு உள்ளதையும் பார்க்கும் அளவிற்கு துல்லிய திறன் கொண்டது. கீழே படத்தில் இதுவும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

  drones3 - 3

  ஆனால் ஆர்மீனியா அஜர்பைஜான் போரின் போது துருக்கி பயன் படுத்தியது இரண்டும் கெட்டான் நிலையில் உள்ள ரகம். அதாவது ட்ரோன் வகைக்கும் இல்லை ஆளற்ற விமான ரகமும் இல்லை. நடுத்தர ரகத்திலினாது.

  ட்ரோன்கள் பொதுவாக குவாட்க்காப்டர் என்பர். இது மினி ட்ரொன், மைக்ரோ ட்ரோன், மைக்ரோ மினி ட்ரோன் என பல்வகை பட்டதும் இருக்கிறது. நம்மூர் கல்யாண மண்டபத்தில் பயன் படுத்தும் ட்ரோன்களை மினி ட்ரொன் வகைக்கு உட்பட்டது. இதில் சற்றே பெரிய ரகம் சுமார் 10 கிலோ கிராம் எடையுள்ள பொருட்களை தூக்கவல்லது. இதனை பயன்படுத்தி வயல்களில் பூச்சி மருந்து தெளிக்கும் வகையில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது

  கடந்த வாரத்தில் நம் ஜம்மு பகுதியில் தாக்குதலுக்கு பயன் படுத்தப்பட்ட ட்ரோன்கள் இந்த வகைக்கு உட்பட்டது தான்.இவை குறைந்த பட்சம் 150 ஆடியில் இருந்து 400 மீட்டர் உயரத்தில் பறக்க கூடியது. ஆனால் இதனை அதிக பட்சமாக ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் இருந்து மட்டுமே இயக்க முடியும்.

  drones4 - 4

  இப்போது நம் சமாச்சாரத்திற்கு வருவோம்.

  கடந்த ஏப்ரல் மாதத்தில் சீனாவில் தென் கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹுன்டாய், தனது புதிய காரை விளம்பரம் படுத்த சுமார் 3281 சிறிய அளவிலான மைக்ரோ ட்ரோன்களை வானில் பறக்கவிட்டு அதில் நகரில் எங்கு இருந்து பார்த்தாலும் தெரியும் வண்ணம் அதில் எழுத்தை……. காரின் புதிய மாடலின் பெயரை….. ஒளிரச் செய்து அச்சடித்தது.

  அது இந்த ட்ரோன்கள் அத்தனையும் ஒரு சேர தனித்தனியாக கட்டுப் படுத்தும் திறன் கொண்டதாக இருந்தது. அதேசமயம் ஒன்றோடொன்று மோதாமல் பறக்க ஆர்ட்டிபிஷியல் டெக்னாலஜி பயன்படுத்தி கணினி துணைக் பறக்க செய்து சாதனை படைத்தனர். இப்படி செய்வதன் மூலம் நாம் விரும்பும் வடிவத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள முடியும்.

  drones5 - 5

  இது கின்னஸ் உலக சாதனை பட்டியலிலும் இடம் பிடித்தது.

  ஏற்கனவே சீனா உலக அளவில் கையகலளவில் உள்ள மைக்ரோ ட்ரோன்கள் முதல் மினி ட்ரோன்களை வர்த்தக ரீதியில் விற்பனை செய்து வருகிறது. இன்றுள்ள நிலையில் யார் வேண்டுமானாலும் இதனை ஆன்லைனில் வாங்கி பயன் படுத்த முடியும். இது சீனாவில் மட்டுமல்லாமல் உலகில் பல்வேறு நாடுகளிலும் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்ததாலும் சீனா இந்த வர்த்தகத்தை தன் வசம் வைத்திருக்கிறது.

  ஆச்சா……

  நம் இந்தியாவில் கடந்த வாரத்தில் ஹைதராபாத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட ஒரு சாதனம் உலக அளவில் பலரது கவனத்தை ஈர்த்தது. அது ஒரு ஆன்டி-ட்ரோன் ஸிஸ்டம். அதாவது ட்ரோன்களை கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பம்.

  பெயர் #இந்திரஜால்.

  நிஜத்திலும் இதன் செயல்பாடுகளும் இந்திர ஜாலம் தான்.

  ஆயுதம் ஏந்திய நிலையில் உள்ள ட்ரோன்களாகட்டும்….. அல்லது அத்து மீறி பறக்கும் ட்ரோன்களாகட்டும் எதனையும் இது அடித்து வீழ்த்தக்கூடியது. இது நவீன லேசர் தொழில்நுட்பத்தில் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த இந்திய தனியார் நிறுவனம்.

  உலகிலேயே இது தான் இந்த வகையில் உன்னத தரத்திலான செயல்பாடுகளை கொண்டுள்ளது என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். உதாரணமாக ஒன்று பாருங்கள்…..

  இந்தியா முழுமைக்குமான எல்லை பாதுகாப்பிற்கு வெறும் 16 கருவிகள் போதுமானது என்கிறார்கள் இவர்கள். இதன் பாதுகாப்பு அம்சமானது வானில் கண்களுக்கு தெரியாத தேன் கூட்டின் வடிவிலான ஒத்த விதத்திலான வலையமைப்பு கொண்டதாக இருக்கும், இதன் ஊடாக எல்லைக்கு மறுபுறத்தில் இருந்து எந்த ஒரு சிறிய அளவிலான ட்ரோன்களும் பறந்து வர இயலாது…. அப்படி வரும் பட்சத்தில் இதில் பொருத்தப்பட்டுள்ள கருவியானது தானியங்கி முறையில் இயங்கி அதனை எரித்து விடும் அளவிற்கு சக்தி வாய்ந்தது. இதன் கண்காணிப்பு எல்லை 1000 சதுரகிலோமீட்டர் பரப்பளவு முதல் 2000 சதுர கிலோ மீட்டர்.

  drones6 - 6

  இது நமது மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பப்பட்டு காத்திருக்கிறது. அதனால் அதிகார பூர்வமாக இந்நிறுவனம் குறித்த மற்றைய விபரங்கள் பொது வெளியில் அறிவிக்க படவில்லை என்கிறார்கள். இது இந்திய இளம் தலைமுறை தொழில்நுட்ப இஞ்சினியரிங் மாணவர்களின் தயாரிப்பு என்பது தான் இதில் உள்ள விசேஷம்.

  நம் பாரதப் பிரதமரின் நீண்ட கால நோக்கில் ஏற்படுத்தப்பட்ட திட்டங்களில் வழியாக வரும் படைப்பாற்றல் இது என்கிறார்கள். ஆதலால் மற்ற மேற்படி விபரக்குறிப்பு எதுவும் பொதுவெளியில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மத்திய மனிதவள மேம்பாட்டு அபிவிருத்தி அமைச்சு கீழ் கொண்டு வர முயற்சி செய்து கொண்டு இருப்பதாகவும்…… இதற்கு இந்திய அறிவு சார் காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது என்றும்…….உலக அளவிலான தரச் சான்றிதழ் பெற முயற்சிகளை மத்திய அரசு நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது என்கிறார்கள்.

  இது சாத்தியமானால் வர்த்தக நோக்கில் உலக அளவில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திட கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

  கீழே படத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாணவர் ஒருவர் உலக அளவில் இத்துறையில் பெரும் சாதனைகளை படைத்து வருகிறார்…. பிரதமரின் ஆலோசனையின் பேரில் மத்திய அரசு நிர்வாகம் தனிப்பட்ட விதத்திலான சில ஏற்பாடுகளையும் பாதுகாப்பு விஷயங்களையும் கவனம் செலுத்தி வருகிறது.

  சமூக வலைதளங்களில் இருப்பவர்களுக்கு இவர் குறித்தான செய்திகள் பரிட்சியமானது…….. என்பதால்….. நாம் இங்கு இதனை தனிப்பட்ட விதத்தில் குறிப்பிடவில்லை. வேண்டுமானால் ஒரு க்ளு…… கடந்த காலத்தில் ஜப்பானில் நடைபெற்ற உலகளவிலான ட்ரோன்கள் குறித்தான ஆய்வு கட்டுரைகளுக்கு முதல் பரிசு பெற்று இருக்கிறார்.

  மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து படித்து முன்னேறியவர். சொல்லப் போனால் இந்த அரங்கில் கலந்து கொள்ள ஒரேயொரு சர்ட் மாத்திரமே அணிந்து கொண்டு சென்று……. அதனையே இரவு வேளைகளில் துவைத்து உலர்த்தி மறுநாள் பயன் படுத்தி வந்திருக்கிறார் என்பதே அந்நாளில் நம் ஊடகங்கள் வெளிவந்த தகவல்கள்.

  இவர் எத்துறையில் நிபுணத்துவம் என்பதை விட இதில் தான் அதிக கவனம் செலுத்தி செய்தி வெளியிட்டு இருந்தார்கள் அன்று…..

  போகட்டும்….. இது போக நம் DRDO நிறுவனங்கள் சார்பில்….. எல்லையில் அதி நவீன லேசர் கருவிகளை கொண்ட ரேடார் உபகரணங்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  மேலும் இந்த வகை ட்ரோன்களில் அதிநவீன துப்பாக்கியான AK 203 பொருத்தி பறக்க செய்து…. ட்ரோன்களை வானில் வைத்து இடைமறித்து சுட்டு வீழ்த்தும் புதிய ட்ரோன்களை வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்து இருக்கிறார்கள்.

  இனி வரும் காலங்களில்……. உலகிலேயே ட்ரோன் டெரரிஸம் என்பதை வெற்றிகரமாக எதிர் கொள்ளும் முதல் நாடாக இந்தியா மாறக்கூடும். அதுவே முதன்மை நாடாகவும் விளங்கக்கூடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆக கவலை விடுத்து ஊடகங்கள் உமிழும் பொய் புரளிகளை நம்பாமல் இருக்க முயற்சி செய்யலாம்…. முடியுமானால் வரவிருக்கும் நாட்களில் நாடு அடையும் உன்னத தரத்திலான பொறிமுறைகளை இன்னமும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டலாம்.

  பிரயோஜனமாகவாவது இருக்கும்.

  💓 ஜெய்ஹிந்த்.
  – ஸ்ரீ ராம்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  368FollowersFollow
  40FollowersFollow
  74FollowersFollow
  1,589FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-