Home அடடே... அப்படியா? கேலக்ஸி எம்52 5ஜி சிறப்பம்சங்கள்!

கேலக்ஸி எம்52 5ஜி சிறப்பம்சங்கள்!

Galaxy M52S5G
Galaxy M52S5G

சாம்சங் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான கேலக்ஸி எம்52 எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர்-19 அன்று இந்தியாவில் அறிமுகமாகியிருக்கிறது.

தொடர்ந்து தன்னுடைய 5ஜி தொழிநுட்பங்களை சந்தைக்கு கொண்டு வரும் சாம்சங் நிறுவனம் தன்னுடைய ‘எம்’ வரிசை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இதையும் சந்தைப்படுத்த இருக்கிறது.

விற்பனை விலை தெரியாமல் இருந்த நிலையில் தற்போது அதன் விவரங்கள் வெளியாகியிருக்கின்றன.

அதன் படி , 6ஜிபி நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.35,999 என்றும் 8ஜிபி ரூ.37,499 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதன் அடுத்த பதிப்பான samsung galaxy M52 5G மாடலை கடந்த வாரம் அமேசான் தளத்தில் அறிமுகப்படுத்தியது. ஆனால் எந்த தேதியில் விற்பனையாகிறது என்ற விவரங்களை குறிப்பிடவில்லை. இந்நிலையில் வருகிற செப்டம்பர் 28 ஆம் தேதி மதியம் 12 மணியளவில் samsung galaxy M52 5G மாடல் விற்பனைக்கு வர இருப்பதாக அமேசான் அறிவித்துள்ளது.

samsung நிறுவனம் வெளியிட்டுள்ள டீசரின் அடிப்படையில் samsung galaxy M52 5G ஆனது 7.4mm அளவில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

samsung galaxy M52 5G மிகவும் எடை குறைந்த மொபைல்போனாக இருக்கும் என்றே சாம்சங் நிறுவனம் இதை குறிப்பிடுகிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி அளவிலான உள்ளீட்டு சேமிப்பு வசதிகளும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் மூன்று பின்பக்க கேமரா வசதிகள், (64 மெகா பிக்சல் பிரைமரி சென்சார், 12 மெகா பிக்சல் அல்ட்ரா ஒயிட் சென்சார், 12 மெகா பிக்சல் மேக்ரோ சென்சார் ) , 32 மெகா பிக்சல் முன்பக்க ஹோல் பஞ்ச் கேமரா வசதி கொடுக்கப்படிருக்கிறது.

ஃபிங்கர் பிரிண்ட் தொழில்நுட்ப வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளது. மேலும் 6.7-inch அளவிலாம full-HD திரை மற்றும் 1,080×2,400 அளவிலாம பிக்சல் ரெசலுயூசன் வசதிகளை கொண்ட Infinity-O டிஸ்ப்ளே வசதிகளை இது கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் 120Hz அளவுலான ரெஃப்ரஸ் ரேட் மற்றும் 20:9 அளவிலான அஸ்பக்ட் ரேஷியோ வசதிகளும் இதில் இடம்பெறும் என தெரிகிறது. Snapdragon 778G புராசஸருடன் ஆண்ட்ராய்ட் 11 இயங்குதள வசதிகளுடனும் களமிறங்குமாம்.இது தவிர ப்ளூடூத், வைஃபை, வேகமாக சார்ஜிங் செய்வதற்கான USB Type-C port வசதி உள்ளிட்டவைகளும் 4ஜி மற்றும் 5ஜி ஆகிவற்றிற்கான வசதிகளும் samsung galaxy M52 5G மொபைலில் கொடுக்கப்பட்டுள்ளது.

samsung galaxy M52 5G விலை அதிகாரப்பூர்வமாக குறிப்பிடப்படவில்லை என்றாலும் 8 GB ரேம் மற்றும் 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் வசதி கொண்ட மொபைலானது கிட்டத்தட்ட 33 ஆயிரம் ரூபாய்க்கு விற்ப்பனையாகலாம் என கூறப்படுகிறது. மேலும் கருப்பு, ஊதா, வெள்ளை என்ற மூன்று நிறத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

*6.7 இன்ச் அளவுள்ள எச்டி தொடுதிரை

*778ஜி ஸ்னாப்டிராகன் பிராசஸர்

*642எல் ஜிபியூ செயலி

  • உள்ளக நினைவகம் 8ஜிபி + கூடுதல் நினைவகம் 256 ஜிபி

*1டிபி (1024 ஜிபி) வரை ஏற்றுக்கொள்ளக்கூடிய மெமரி கார்டு வசதி

*பின்பக்கம் 64 எம்பி கேமரா ஓசிஎஸ் (12எம்பி+5எம்பி+5எம்பி ) , முன்பக்கம் 32 எம்பி செல்பி கேமரா

*4500 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி

*ஆண்ட்ராய்டு 11

இந்த ஸ்மார்ட்போனை அமெசான் , பிளிப்கார்ட் போன்ற இணைய தளங்களிலும் , நேரடியாக சாம்சங் விற்பனையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம் .

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version