Homeதொழில்நுட்பம்இன்ஸ்டாகிராம்: ரீல்ஸ், ரீமிக்ஸ் எக்ஸ்ட்ரா அப்டேட்ஸ்..!

இன்ஸ்டாகிராம்: ரீல்ஸ், ரீமிக்ஸ் எக்ஸ்ட்ரா அப்டேட்ஸ்..!

Instagram - Dhinasari Tamil

டிக்-டாக் தடை செய்யப்பட்ட பிறகு இன்ஸ்டாகிராம் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் இடையே பிரபலமடைய காரணம் அதில் உள்ள ‘ ரீல்ஸ் ‘ வசதி தான்.

பிற சமூக வலைத்தள பக்கங்களைப் போல் புகைப்படம் மற்றும் கருத்தை மட்டும் பகிர்ந்து கொள்ளும் தளமாக இல்லாமல், ஆடல், பாடல், காமெடி என இளம் தலைமுறையினர் தங்களது திறமை சார்ந்த வீடியோக்களை பதிவேற்றவும், அதன் மூலம் பிரபலமடையும் தளமாகவும் இன்ஸ்டாகிராம் விளங்குகிறது.

இந்த செயலி இளம் தலைமுறையினரைக் கவர அதிமுக்கிய காரணம் ரீல்ஸ் என்பதால், இன்ஸ்டாகிராம் நிறுவனம் அடுத்தடுத்து ரீல்ஸ் சேவைக்கான பயன்பாட்டு வசதிகளை அவ்வப்போது அப்டேட் செய்து வருகிறது.

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்களுக்கான ரீமிக்ஸ் அம்சத்தை அறிமுகப்படுத்தியது, இது யூசர்கள் தங்கள் வீடியோக்களில், பிற யூசர்களின் ரீல்களை இணைக்க உதவுகிறது.

இந்த வசதி மூலமாக யூசர்கள் ரீமிக்ஸை உருவாக்கும் போது, ​​மற்றொரு பயனரின் அசல் ரீல் திரையின் இடது பக்கத்தில் தோன்றும், அதே நேரத்தில் அவர்களின் சொந்த பதிவு வலதுபுறத்தில் தோன்றும். இரண்டு வீடியோக்களும் ஒரே நேரத்தில் இயக்கப்படும். இது யூசர்கள் போட்டி வீடியோக்கள், டூயட்கள் போன்றவற்றை உருவாக்க அனுமதிக்கிறது.

ஆரம்பத்தில் தேர்தெடுக்கப்பட்ட வீடியோக்களுக்கு மட்டுமே இந்த சேவை வழங்கப்பட்ட நிலையில், இன்ஸ்டாகிராம் நிறுவனம் இதனை தற்போது புதுப்பித்துள்ளது.

இதன் மூலம் இன்ஸ்டாகிராம் பொதுவெளியில் பதிவிடப்படும் எந்த வீடியோவுடனும் உங்களுடைய வீடியோவை இணைத்து ரீமிக்ஸ் வீடியோக்களை உருவாக்கலாம்.

இந்த சேவையை பயன்படுத்தி பிறரது வீடியோவிற்கு நகைச்சுவையான ரியாக்‌ஷன் வீடியோவை தயார் செய்யலாம். இந்த வகையான வீடியோக்கள் இன்ஸ்டாகிராம் யூசர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் லைக்ஸை அள்ளுவது பற்றிய கவலை உங்களுக்கு இருக்காது.

ரீமிக்ஸ் வீடியோக்களை உருவாக்குவது எப்படி?

முதலில் இன்ஸ்டாகிராமில் இருந்து உங்களுக்கு பிடித்தமான வீடியோவை தேர்ந்தெடுங்கள்.

அதன் பின்னர் தேர்வு செய்யப்பட்ட வீடியோவில் வலதுபுறம் உள்ள மூன்று புள்ளிகளை க்ளிக் செய்யுங்கள்.

ரீமிக்ஸ் வீடியோவை உருவாக்குவதற்கான ஆப்ஷனை அதன் யூசர் கொடுத்திருந்தால், ‘இந்த வீடியோவை ரீமிக்ஸ் செய்’ என்ற விருப்பத்தை காணலாம்.

அப்படி ஒரு விருப்பம் தென்பட்டால் அதனை கிளிக் செய்ததும் ரீமிக்ஸ் விண்டோ திறப்பதை பார்க்க முடியும்.

அந்தத் திரையில் நீங்கள் உங்களுடைய புதிய வீடியோவை பதிவு செய்யலாம் அல்லது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வீடியோவைப் பதிவேற்றலாம். அசல் வீடியோவின் ஆடியோ தொடர்ந்து இயங்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

ரீமிக்ஸ் வீடியோ உங்களுக்கு திருப்திகரமானதாக உள்ளதா என்பதை வெளியிடுவதற்கு முன்னதாகவே பார்க்க வெள்ளை மாதிரிக்காட்சி பட்டனைக் கிளிக் செய்யவும்.

அதன் பின்னர் உங்களுக்கு அந்த ரீமிக்ஸ் வீடியோ பிடித்திருந்தால் நீலப் பகிர் பொத்தானைக் கிளிக் செய்து அந்த வீடியோவை ரீல்ஸ் தளத்தில் பதிவிடலாம்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

Follow Dhinasari on Social Media

19,153FansLike
374FollowersFollow
64FollowersFollow
74FollowersFollow
2,542FollowersFollow
17,300SubscribersSubscribe

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

சிவாஜி கணேசன் குடும்பத்தில் மற்றுமொரு நடிகர் உதயம்!

தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில் தெருக் கூத்து நாடகங்களில் பங்கேற்றுள்ளார்.

175 நாள்.. அகண்ட சாதனை படைத்த அகண்டா!

பாலகிருஷ்ணாவின் 'அகண்டா' படம் 175 நாட்கள் ஓடியிருப்பது திரையுலகினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

AK61: விமான ஓடு தளத்தில் இருக்கும் வீடியோ..!

அஜித் குமார் மற்றும் மஞ்சுவாரியர் இருக்கும் புதிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது

பிரதமரின் சரியான, தொலைநோக்கு அணுகுமுறையை சிலாகித்த நடிகர் மாதவன்!

பதவிக் காலத்தை தொடங்கியபோது, ​​மைக்ரோ எகானமி மற்றும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தினார்

Latest News : Read Now...

Exit mobile version