இணையம் பயன்படுத்தும் பெரும்பாலானோர் தற்போது நாடுவது கூகுள் குரோம் ப்ரௌசரையே! குரோம் வருவதற்கு முன்னர், விண்டோஸின் எக்ஸ்ப்ளோரர், மோஸில்லா ஃபயர்ஃபாக்ஸ், நெட்ஸ்கேப், ஓபரா இவை எல்லாம் பிரபலமான ப்ரௌஸர் வகைகளாக இருந்தன. கூகுள் குரோம் வந்த பின்னர், குரோம் ப்ரௌசரே முக்கிய இடத்தைப் பிடித்தது.

இந்திய மயமாக்கல் என்ற தத்துவத்தில், மோஸில்லா பயர்ஃபாக்ஸின் அடிப்படையைக் கொண்டு, இண்டிக் ப்ரௌசர் அறிமுகம் செய்யப் பட்டது. ஆனால் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்ட அந்த பிரௌசரைக்குப் பின்னர், கூகுள் குரோமே இந்திய மயமாக்கம் கண்டது.

இந்நிலையில், தொலைத்தொடர்புத் துறையில் கோலோச்சும் ரிலையன்ஸ் ஜியோ இப்போது ப்ரௌசரையும் புதிதாக விட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு என்று சில வித்தியாசமான ப்ரௌஸர்கள் புழக்கத்தில் உள்ளன. யுசி ப்ரௌசர், குரோம், ஃபயர்ஃபாக்ஸ், எட்ஜ் உள்ளிட்ட பல ப்ரௌசர்கள் இருந்தாலும், சாம்சங்க் மொபைல் போன் தனக்கென்று பிரத்யேக ப்ரௌஸரை பதிந்தே மொபைல் போன்களை விற்பனை செய்கிறது.

தற்போது ஆண்ட்ராய்ட் சந்தையில், புதிதாக நுழைந்திருக்கிறது ஜியோ ப்ரௌசர். இந்திய பயனாளர்களை கருத்தில் கொண்டு, இந்த ப்ரெளசர் உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற ப்ரெளசர்களை போன்று செய்திகள், வீடியோக்களை பகிரும் வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.‌

ஆண்ட்ராய்டு போன்களில் இந்த ப்ரெளசரை பயன்படுத்தலாம். இன்னமும் டெஸ்க்டாப் கணினிகளுக்கான வடிவமைப்பு வெளியாகவில்லை. ஆண்ட்ராய் போன்களில் பதிந்து கொள்ள கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்துகொள்ளலாம். தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம், கன்னடம், ஹிந்தி, குஜராத்தி, பெங்காலி உள்ளிட்ட 8 இந்திய மொழிகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த ப்ரௌசர் வெளியாகியுள்ளது. .

இதனை பயன்படுத்திப் பார்த்த போது, மற்ற ப்ரைஸர்களைக் காட்டிலும் வேகம் மிக அதிகமாகவே இருந்தது. இணையப் பக்கங்கள் விரைவில் தரவிறக்கம் செய்யப் பட்டன.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...