Home Reporters Diary என்கவுண்டரில் நீதி கிடைக்காது: வரங்கல் ஆசிட் வீச்சில் பாதிக்கப் பட்ட பெண் கருத்து!

என்கவுண்டரில் நீதி கிடைக்காது: வரங்கல் ஆசிட் வீச்சில் பாதிக்கப் பட்ட பெண் கருத்து!

என்கவுண்டரில் நீதி கிடைக்காது. அந்த சம்பவம் கெட்ட கனவாக பின் தொடர்ந்து வருகிறது என்கிறார் வரங்கல் ஆசிட் வீச்சில் பாதிக்கப் பட்ட பெண் ப்ரணீதா.

திசா குற்றவாளிகளின் என்கவுன்டர் சம்பவம் பற்றி நாடே மகிழ்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில் வித்தியாசமாக கருத்து தெரிவித்துள்ளார் முந்தைய ஆசிட் வீச்சு சம்பவத்தில் பாதிக்கப் பட்ட பெண் ப்ரணீதா.

“பெண்களின் மீது பாலியல் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சமுதாய ஹிம்சை அல்லாமல் சட்ட ரீதியாக அவர்களை கடினமாக தண்டிப்பதே தீர்வு” என்று கருத்து தெரிவித்தார் தற்போது அமெரிக்காவில் உள்ள ப்ரணிதா.

தற்போது அமெரிகாவில் கொலராடோவில் உள்ள ப்ரணீதா ‘ஹபிங்டன் போஸ்ட்’ இதழுக்கு அளித்த இன்டர்வியூவில் பேசும்போது தன் மீது அசீட் தாக்குதல் செய்த மூன்று குற்றவாளிகளையும் என்கவுண்டர் செய்தாலும் இப்போதும் நீதி கிடைத்து விட்டதாக தான் எண்ணவில்லை என்றார்.

பெண்கள் மீது தாக்குதல் நடக்காமல் பார்த்துக் கொள்வதே சரியான நீதி என்று குறிப்பிட்டார். ஹைதராபாத் குற்றவாளிகளை என்கவுன்டர் செய்வதற்கு இரண்டு நாட்கள் முன்பு இந்த இன்டர்வியூ வெளியானது.

தன்னுடைய வழக்கு தொடர்பாக நடந்த என்கவுன்டர் தன்னை இன்று வரை நிழலாக பின் தொடர்வதாக பிரணீதா கூறினார்.

காகதீயா இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி (கிட்) ல் பிடெக் இறுதி ஆண்டு படித்து வந்த பிரணீதா, ஸ்வப்னிகா மீது 2008ல் ஆசிட் தாக்குதல் நடந்தது.

அதற்கு மூன்று நாட்கள் முன்புதான் குற்றவாளி ஸ்ரீனிவாஸ் ஸ்வப்னிகாவிடம் ப்ரபோஸ் செய்தான். ஆனால் அவள் அதை நிராகரித்தாள். கல்லூரியில் இதெல்லாம் வழக்கம்தான் என்று தான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் ஸ்ரீநிவாஸ் மீது ஸ்வப்னிகா போலீசில் புகார் அளித்தார்.

இருவரும் தன் பைக் மீது வரும்போது ஸ்ரீனிவாஸ் தன் தோழர்களோடு வந்து ஆசிட் ஊற்றினான். காயமுற்ற தங்களை யாரோ மருத்துவமனையில் சேர்த்தார்கள் என்று பிரணீதா அந்த நாட்களை நினைவு கூர்ந்தார்.

தோழியோடு சேர்ந்து கிளாசில் இருந்து திரும்பி வரும்போது எங்கள் மீது ஆசிட் தாக்குதல் நடந்தது. ஹாஸ்பிடலில் இருந்தபோதே மூன்று குற்றவாளிகளையும் என்கவுண்டர் செய்ததாக செய்தி வந்தது. ஆனால் அவர்களின் சாவுக்கு நீங்கள்தான் காரணமானீர்கள் என்று யாராவது சுட்டிக் காட்டினால் நான் என்ன தப்பு செய்தேன் என்ற வருத்தம் ஏற்படுகிறது.

என்கவுண்டர் உங்களிடம் தன்னம்பிக்கையை வளர்த்ததா என்ற கேள்வி மட்டும் தயவுசெய்து என்னைக் கேட்காதீர்கள். இது குறித்து நான் எப்போதும் சிந்திக்கவில்லை. அதுகுறித்த பேச்சை கேட்டாலே எனக்கு அச்சமாக உள்ளது என்று விவரித்தார்.

என் தோழி ஸ்வப்னிகா தன் காதலை ஏற்கவில்லை என்று ஆசிட் தாக்குதல் செய்தான் ஸ்ரீநிவாஸ். டிசம்பர் 10, 2008 இல் வரங்கலில் பிரணீதாவோடு அவர் தோழி ஸ்வபினிகா மீதும் மூன்று பேர் ஆசிட் தாக்குதலில் ஈடுபட்டனர்.

தீவிரமாக காயமடைந்த ஸ்வப்னிகா இருபது நாட்களுக்குப் பின் மரணம் அடைந்தார். பிரணீதா சில நாட்களுக்குப் பிறகு காயங்களிலிருந்து குணமாகி தற்போது அமெரிக்காவில் டென்வர் நகரில் வசித்து வருகிறார்.

தன் காதலை அங்கீகரிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் குற்றவாளி ஸ்ரீனிவாஸ் தன் தோழர்களோடு சேர்ந்து வந்து அவள் மீது ஆசிட் ஊற்றினான். அந்த நேரத்தில் தோழியோடு சேர்ந்து ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த பிரணிதா மீதும் ஆசிட் ஊற்றினர்.

உங்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளின் என்கவுன்டரால் நியாயம் கிடைத்துவிட்டதாக நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு பிரணிதா, “அப்படிப்பட்ட செயல்களால் எந்த நியாயமும் நிகழாது. அது மட்டுமல்ல என் முகம், தோல் போன்றவை சாதாரண நிலைக்கு வந்து இயல்பு வாழ்க்கை வாழும் போதுதான் எனக்கு நியாயம் கிடைத்ததாக நான் நினைப்பேன் என்றார். என்னால் இன்னும் அந்த சம்பவத்திலிருந்து வெளி வர இயலவில்லை என்று வேதனை தெரிவித்தார்.

எனக்கு மொத்தம் 14 முறை ஆபரேஷன் செய்தார்கள். சில நாட்களிலேயே முழுவதாக என் வாழ்க்கை மாறிப் போனது . கண்ணாடி முன் நின்றால் ஆசிட் ஊற்றிய சம்பவம் நினைவுக்கு வருகிறது. டிஸ்டிங்ஷனில் பாஸாகி இன்ஃபோசிஸில் வேலை கிடைத்த போதும் என் வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. பிசினஸ் டிரிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டி வரும்போது நீங்கள் உடலளவில் ஃபிட்டாக இருக்கிறீர்களா என்று டீம் லீடர் கேட்ட போது அவரோடு சண்டையிட்டேன் என்று தெரிவித்தார்.

திசா தன் தங்கை கூறியதுபோல் டோல் பிளாசா அருகில் சென்று நின்று இருந்தால் யாராவது உதவி இருப்பார்கள் என்றார். தவறு செய்தாலும் தம்மை யாரும் பிடிக்க மாட்டார்கள். ஒருவேளை பிடிபட்டாலும் பெயிலில் வெளியே வந்துவிடலாம் என்ற குருட்டு தைரியத்தில் தான் நிறைய பேர் குற்றம் செய்ய முன் வருகிறார்கள் என்று கருத்துக் கூறினார் பிரணிதா.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version