Home அடடே... அப்படியா? இதுக்கு பேசாம… ஈ.வே.ரா., என்பதே கற்பனைப் பாத்திரம்; வரலாற்றுப் புனைவு என்று சொல்லி விடலாமே!

இதுக்கு பேசாம… ஈ.வே.ரா., என்பதே கற்பனைப் பாத்திரம்; வரலாற்றுப் புனைவு என்று சொல்லி விடலாமே!

evr statue

இன்னும் ஐந்து ஆண்டுகளில் பெரியாரிஸ்டுகள் எழுதபோகும் வரலாறு இதுதான்

தமிழில் ஆழ்வாராகவும் அடியாராகவும் அதாவது சிவபக்தனாகவும் விஷ்ணுபக்தனாகவு கூடவே பிரம்மனின் பக்தனாகவும் அந்த ராம்சாமி இருந்தார்

அனுதினமும் காலை குளித்து பிள்ளையாரை வணங்கி ஊரில் உள்ள எல்லா ஆலயங்களுக்கும் செல்வார், அந்த இருபது வயதிலே காசிவரை சென்று வணங்கினார்

அந்த பக்திமிக்க ராம்சாமி சமஸ்கிருதம் படிக்க சென்றார், ஆனால் அவரை பார்பானியர்கள் தேர்வில் பெயிலாக்கினர், ஆங்கிலேயர் முன்னால் தேர்வு எழுதினாலும் ஆங்கிலேயனையும் கழுத்தில் கத்தி வைத்து ராம்சாமியினை பெயிலாக சொன்னார்கள்

ராம்சாமி சமஸ்கிருந்த மந்திரம் கற்று சங்கரர், ராமானுஜர் போல இந்தியா முழுமையும் இந்தியா தாண்டி சீனா மற்றும் சோவியத் யூனியனிலும் இந்துமதம் தழைக்க விரும்பினார்

ஐரோப்பாவில் அவர் இந்துமதத்தை போதித்தபொழுது ஜெர்மானியர் அவரை அம்மணமாக்கி நிறுத்தினர், சாது கோலத்தில் இந்துமதத்தில் இதுவும் அனுமதிக்கபட்டது என அவர் சொல்ல ஜெர்மானியர் கண்ணீர் விட்டனர்

சோவியத்தில் அவர் இந்துமதம் பரப்பினார், சோவியத் எச்சரித்தது இன்னும் எழுபது ஆண்டுகளில் இந்த வல்லரசு உடைந்து சிதறும் என சாபமிட்டார் ராம்சாமி, ஆச்சரியமாக அதுதான் நடந்தது , சோவியத் உடைந்தபொழுது அவர்கள் ரிஷி ராம்சாமியின் நினைவாக இது ராம்சாமி நாடு என அம்மொழியில் பெயரிட்டார்கள் அது ரஷ்யா ஆயிற்று

அப்படிபட்ட சித்த புருஷணை தமிழக பார்ப்பானியர்கள் சிறுமைபடுத்தினர், அதையும் மீறி ஒருநாள் வைக்கம் ஆலயத்தில் உள்சென்று தமிழ் மற்றும் மலையாள பதிகம் பாடினார் ராம்சாமி

ஆத்திரமுற்ற பிராமணர்கள் அந்த பக்திமானை வெளியே இழுத்து வந்து அவர் வணங்கிய‌ பிள்ளையார் சிலைமேல் தள்ளினர், அந்த பிள்ளையார் சிலை உடைந்தது பழி ராம்சாமி மேல் தந்திரமாக திருப்பபட்டது

சேலத்தில் மக்களிடம் ராமனின் ஆட்சி எப்படி இருந்தது என்பதை ராம்சாமி ஊர்வலமாக சென்று சொல்லிகொண்டிருந்தார், அன்று கோவிலுக்கு யாரும் வரவில்லை

இதனால் ஆத்திரமுற்ற பார்ப்பானிய கூட்டம் உள்ளே புகுந்து கடவுளென்றும் பாராமல் ராமனை கொளுத்தி பழியினை பெரியார் மேல் போட்டது

விஷயத்தின் உண்மையினை அறிந்த கருணாநிதி இதனால்தான் ராம்சாமியினை கைது செய்யவில்லை

அத்தோடு விட்டதா பார்பானியம்

ராம்சாமி தெருவில் நடந்தபொழுது, இதோ கயவன் என சொல்லியபடியே வெறிபிடித்த ஆரிய பார்பானிய கூட்டம் அவரை தன் கையில் இருந்த குடையால் தாக்கியது, ராம்சாமியின் சட்டையினை கிழித்து அவரை காயபடுத்தி அங்கேயே போட்டுவிட்டு சென்றது

மயக்கம் தெளிந்து எழும்பிய ராம்சாமிக்கு சட்டை இல்லை, தாடி கீழ்வரை வளர்ந்ததால் மானம் தப்பியது

ராம்சாமிக்கு ஏன் தாடி என கேட்கலாம், பார்பானிய மிரட்டலில் நாவிதர்கள் அவருக்கு முடிவெட்ட தாடியெடுக்க வரவில்லை, அவர்களை பழிவாங்க தாடி வளர்த்தார் ராம்சாமி

அப்பொழுது வானத்தில் இருந்து அசரீரீ கேட்டது ” ஏ ராம்சாமியே, ஆழ்வாருக்கும் அடியவருக்கு மூத்தவனே, சட்டை கிழிந்தது கண்டு வருந்தாதே, அதோ பிராமணன் விட்டு சென்ற குடையில் இருக்கும் கருப்பு துணி எடுத்து சட்டையாய் அணிந்துகொள், அது எக்காலமும் உன் புகழை அவணியில் சொல்லும்”

அந்த இடத்திலே பிராமணனின் குடையில் இருந்த கருப்பு துணி எடுத்து சட்டை தைத்தார் ராம்சாமி, இயேசுவுக்கு சிலுவை போல ராம்சாமிக்கு கருப்பு சட்டை வந்தது இப்படித்தான்

மணியம்மையினை டாக்டராக்கி உலக மங்கையர் விடுதலை பெற பாடுபட்டவர் பெரியார் ஆனால் பார்ப்பணியம் தடுத்தது

நீட் தேர்வு இல்லாமல் அண்ணா, கருணாநிதி, வீர்மணியினை டாக்டராகவும் விஞ்ஞானியாகவும் ஆக்க முயன்றவர் பெரியார், பார்பணியம் தடுத்தது

ஊரெல்லாம் பார்பணிய கொடுமையால் சுத்தமின்றி இருந்தது, ஆலயங்களில் கழிவறை இல்லை, அதை வலியுறுத்த மூத்திர சட்டி ஏந்தி ஆலயத்தில் சுகாதாரம் அவசியம் என போதித்தவர் ராம்சாமி

  • பாமரக் கற்பனை

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version