- TV ஸ்க்ரீனை துடைக்கும் போது செய்யவே கூடாத 8 தவறுகள்! மீறினால் நிரந்தர டேமேஜ்!
- 1. டவல்கள் (துண்டுகள்) மற்றும் டிஷூக்களை பயன்படுத்தலாமா?
- 2. டிவி ஸ்க்ரீனை கொஞ்சம் அழுத்தி தேய்க்கலாமா?
- 3. டிவி ஸ்க்ரீனில் நேரடியாக ஸ்ப்ரே சொல்யூஷனை அடிக்கலாமா?
- 4. தண்ணீர் தொட்டு டிவி ஸ்க்ரீனை துடைக்கலாமா?
- 5. டிவி பார்த்துக்கொண்டே டிவியை சுத்தம் செய்யலாமா?
- 6. வளைத்து வளைத்து எல்லா திசைகளிலும் துடைக்கலாமா?
- 7. ஒரே துணியை வைத்து மீண்டும் மீண்டும் துடைப்பது நல்லதா?
- 8. ஈரம் காயும் முன்பே டிவியை ஆன் செய்து விடலாமா?
டிவிய எப்பவுமே வீட்டம்மாதான் துடைப்பாங்க, அதுவும் டிரை கிளாத்ல தான் துடைப்பாங்க. ஒருநாள் டிவி பார்த்துட்டு இருந்தப்போ கொஞ்சம் தூசியா தெரியுதேன்னு, வீட்ல கண்ணாடிலாம் துடைக்க வாங்கி வச்சிருந்த Colinஐ spray பண்ணி் நல்லா துடைச்சிட்டேன். உத்துப் பாத்தா, இன்னமும் லைட்டா தூசி இருக்கவே, திரும்பவும் ஸ்பிரே பண்ணி சுத்தமா துடைச்சிட்டு, டிவிய ஆன் பண்ணுனா, டிவி நடூல பட்டையா நாலு கருப்புக்கோடு தெரியுது. மனசே உடைஞ்சு போச்சு.
வீட்டம்மா பெரும்பாலும் டிவி பாக்கமாட்டாங்க.அதனால அப்டியே கருப்புப் பட்டையோட ரெண்டுநாள் ஓடிருச்சு. மூணாவது நாள், ஏங்க, போரடிக்குது, எதாவது நல்ல பழைய படமா போடுங்கனு வந்து ஒக்கார. உலகமே தட்டாமால சுத்துது, என்ன நடக்கப் போகுதோன்னு பயந்துகிட்டே டிவியப் போட்டு சர்ச் பண்ண ஆரம்பிச்சதும் என்னங்க டிவில கோடு மாதிரி தெரியுதுன்னதும், தரை நழுவ ஆரம்பிச்சது.
சரி சொல்லிரலாம்னு Colin கதையச் சொன்னதும், கொஞ்சமாவது மூளையிருக்கா, யாராவது டிவிய ஈரத்துணில துடைப்பாங்களான்னதும், என்னோட மேதாவித்தனம் மொத்தமும் சரிஞ்சு சல்லடையாகிருச்சு. அப்புறம் LG service centreக்குக் கூப்டு விசாரிச்சா, டிரை க்ளாத்லதான் துடைக்கனும், தண்ணி படவேக் கூடாதுன்றாங்க. இதை சரி பண்ணமுடியுமான்னு கேட்டா, வாய்ப்பே இல்லன்னுட்டாங்க. டிஸ்ப்ளே மாத்தனும், அதுக்கு புது டிவி வாங்கிருங்கன்னு சொல்லிட்டாங்க.
சோகத்தோட உச்சிக்கே போனாலும், எப்டியாவது நாமளா சரி பண்ணிர்ரதுன்னு முடிவு பண்ணி, மகனைக் கூப்டு யூடியூப்ல பாத்தேன். அந்தக் கோடுலாம் அசால்டா சரி பண்ணிரலாம்னு வெள்ளைக்காரன் சொன்னத நம்பி, மகனை விட்டு டிவிய ஓப்பன் பண்ணச் சொல்லிட்டேன். என்னென்தையோ கழட்டி மாட்டிப் பாத்து சரியாகலன்னு, வேலை இருக்குன்னு அர்ஜெண்டா வெளில கிளம்பிக்கிட்டே, மாட்டி வச்சுருன்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன்.
கொஞ்சம் நேரம் கழிச்சு, ஏம்பா டிவி எப்படி தெரியுதுன்னேன். வந்து பாருங்கப்பான்னு சொன்னதும் எதோ பிராப்ளம்னு தெரிஞ்சதும் சீக்கிரமா திரும்பி வந்து பாத்தேன். டிஸ்ப்ளே நடூல கிராக் விட்டு பாதி பக்கம் படமே தெரியல.தூக்கி மாட்டுனப்ப டிஸ்பிளேல ஓரமா உடைஞ்சிருக்கு. 50 இஞ்ச் LG டிவி மொத்தமா க்ளோஸ்.
இதனால சொல்றது என்னனா, ஸ்மார்ட் டிவிய காஞ்ச துணியால மட்டும் துடைங்க.
எதாவது சின்ன எலெக்ட்ரானிக் பிரச்னைனா, டெக்னீசியன் கிட்ட காட்டி மட்டுமே சரி் பண்ணப் பாருங்க. சின்னப் பிரச்னைனா, அதை சரி்பண்ண முடியாதுன்னா, அப்டியே பாத்துப் பழகிருங்க.நானும் அஞ்சு மாசமா அதுலயே பாத்து, இதுவே போதும்கிற மனநிலைக்கே வந்துட்டேன்.
இப்ப 65 இஞ்ச் அதே LG TV வாஙகி மாட்டிட்டோம். இரண்டு மாச உழைப்பு வேஸ்டாப் போனாலும் இப்பத்தான் மனசுக்கு சந்தோசம்.
ஓவரா சுத்தம் பாத்தா உடம்புக்கு மட்டுமில்ல டிவிக்கே ஆகாது
- அரு. சந்திரசேகர் – என்பவர் தனது சமூகத் தளப் பக்கத்தில் பதிவு செய்திருந்த தகவல் இது.
இப்படி நிறையப் பேர், நன்கு விலை கொடுத்து வாங்கி, டிவி., ஸ்கிரீனை நீர் வீட்டு துடைப்பார்கள். அது குறித்த விழிப்பு உணர்வுக்காகவே இந்தத் தகவல் டிப்ஸ்…
TV ஸ்க்ரீனை துடைக்கும் போது செய்யவே கூடாத 8 தவறுகள்! மீறினால் நிரந்தர டேமேஜ்!
நம்மில் பலரும், வீட்டில் உள்ள மற்ற பொருட்களை போலவே ஸ்மார்ட் டிவியையும் சுத்தம் செய்யும் பழக்கத்தினை கொண்டுள்ளோம். ஆனால் உங்களுக்கு தெரியுமா?
ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்யும் போது, நீங்கள் செய்யும் சிறிய தவறு கூட உங்கள் டிவி ஸ்க்ரீனை நிரந்தரமாக சேதப்படுத்தும் என்று? இன்னும் மோசமான விடயம் என்னவென்றால்? ஸ்மார்ட் டிவி ஸ்க்ரீனை துடைக்கும் போது தெரிந்தோ, தெரியாமலோ நீங்கள் செய்யும் தவறு, சில நேரங்களில் உங்கள் டிவியின் உத்தரவாதத்தை கூட ரத்தாகும் சூழ்நிலையை உருவாக்கலாம் நாம் அனைவருமே தூசி, அழுக்கு மற்றும் கசடுகள் இல்லாத டிவி ஸ்க்ரீனை விரும்புகிறோம். ஆனால் அதை சரியாக (சுத்தம்) செய்வது தான் இங்கே முக்கியம். அப்படியாக, உங்கள் டிவி ஸ்க்ரீனை சுத்தம் செய்யும் போது, தெரியாமல் கூட நீங்கள் செய்ய கூடாத 8 விஷயங்கள் இதோ!
1. டவல்கள் (துண்டுகள்) மற்றும் டிஷூக்களை பயன்படுத்தலாமா?
கூடாது! ஏனெனில் பெரும்பாலான டிவி ஸ்க்ரீன்கள் (எல்சிடி, எல்இடி, ஓஎல்இடி ஸ்க்ரீன்கள்) ஆனது ப்ரெஷர் சென்சிடிவ் ஆக இருக்கும் (அதாவது அழுத்தத்திற்கு உணர்திறன் கொண்டதாக இருக்கும்) மற்றும் அவைகளில் மிகவும் எளிதாக கீறல்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே டிஷூ மற்றும் டவல்களில் உள்ள “இழைகள் கூட” உங்கள் டிவி ஸ்க்ரீனை சேதப்படுத்தலாம். எனவே முடிந்த வரை, அது LCD, OLED, பிளாஸ்மா அல்லது பழைய CRT டிஸ்ப்ளேவாக இருந்தாலும் கூட அதை சுத்தம் செய்ய மைக்ரோஃபைபர் துணியை (Microfiber Cloth) பயன்படுத்தவும். உங்கள் டிவி ஸ்க்ரீனை சேதப்படுத்தாமல், அதில் உள்ள கைரேகைகள் மற்றும் கறைகளை அகற்ற இந்த வகை துணி மிகவும் பொருத்தமானது.
2. டிவி ஸ்க்ரீனை கொஞ்சம் அழுத்தி தேய்க்கலாமா?
நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் – டிவி ஸ்க்ரீன்கள் உடையக்கூடியவை ஆகும். மிகவும் கடினமாக அழுத்தப்பட்டால் அல்லது தேய்க்கப்பட்டால் அது சேதமடையலாம். எனவே டிவி ஸ்க்ரீனை முடிந்தவரை மெதுவாக துடைப்பதை உறுதி செய்யவும்.
3. டிவி ஸ்க்ரீனில் நேரடியாக ஸ்ப்ரே சொல்யூஷனை அடிக்கலாமா?
கூடவே கூடாது! எந்தவொரு க்ளீனிங் சொல்யூஷனையும் நேரடியாக உங்கள் டிவி ஸ்க்ரீனில் தெளிக்காதீர்கள். எப்பொழுதும் பஞ்சு இல்லாத துணி அல்லது மைக்ரோஃபைபர் மீது க்ளீனிங் சொல்யூஷனை வைத்து, பின்னர் அதை ஸ்க்ரீனில் வைத்து மெதுவாக துடைக்கவும். க்ளீனிங் சொல்யூஷனை நேரடியாக தெளிப்பதன் மூலம் ஸ்க்ரீனில் நிரந்தர அடையாளங்கள் அல்லது கறைகள் ஏற்படலாம்.
4. தண்ணீர் தொட்டு டிவி ஸ்க்ரீனை துடைக்கலாமா?
தண்ணீர் மட்டும் அல்ல, முடிந்தவரை எல்லா திரவங்களையுமே டிவி ஸ்க்ரீனில் இருந்து விலக்கி வைக்கவும். திரவங்களை பயன்படுத்தி உங்கள் டிவியை சுத்தம் செய்தால் அது டிவியின் உள் பகுதிகளை சேதப்படுத்தலாம். குறிப்பாக அமோனியா, ஆல்கஹால் அல்லது அசிட்டோன் கொண்ட தயாரிப்புகளை நீங்கள் பயன்படுத்தவே கூடாது, ஏனெனில் அவைகள் டிவி ஸ்க்ரீனில் உள்ள ஆன்டி-க்ளேர் கோட்டிங்கை (Anti-glare coating) சேதப்படுத்தலாம்.
5. டிவி பார்த்துக்கொண்டே டிவியை சுத்தம் செய்யலாமா?
வேண்டாம்! சுத்தம் செய்யும் போது உங்கள் டிவி ஆஃப் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள், ஏனெனில் இது மின் விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. அதுமட்டும் இல்லாமல், ஸ்க்ரீன் “கருப்பாக” இருக்கும் போது தான், அதில் உள்ள அழுக்குகளை மற்றும் கோடுகளை கண்டறிய முடியும்; அதை அகற்ற முடியும். மேலும் இருண்ட ஸ்க்ரீனில் தான் தூசிகளும் நன்றாக தெரியும்.
6. வளைத்து வளைத்து எல்லா திசைகளிலும் துடைக்கலாமா?
முடிந்தவரை உங்கள் டிவி ஸ்க்ரீனை சுத்தம் செய்யும் போது, ஒரு திசையில் இருந்து (செங்குத்தாக அல்லது கிடைமட்டமாக) துடைக்க வேண்டும், பின்னர் அதை எதிர் திசையில் இருந்து செய்ய வேண்டும். இது வழிமுறை, ஸ்க்ரீனில் எந்த இடமும் பாக்கி இல்லை என்பதை உறுதிப்படுத்த உதவுகிறது மற்றும் சுத்தம் செய்யும் போது ஸ்க்ரீனில் ஏற்படும் கோடுகளை தவிர்க்கவும் உதவுகிறது.
7. ஒரே துணியை வைத்து மீண்டும் மீண்டும் துடைப்பது நல்லதா?
சிலமுறை பயன்பாட்டிற்கு பிறகு, டிவி ஸ்க்ரீனை சுத்தம் செய்ய நீங்கள் பயன்படுத்தும் துணியை மாற்றுவது நல்லது. ஏனெனில் அதில் தூசிகள் தங்கி விடலாம், அது ஸ்க்ரீன்களில் கோடுகளை, கீறல்களை ஏற்படுத்தலாம். மேலும் நன்றாக சுத்தம் செய்யும் “திறனையும்” இழக்கலாம். எனவே அவ்வப்போது டிவி ஸ்க்ரீனை துடைக்கும் துணியை மாற்றவும்.
8. ஈரம் காயும் முன்பே டிவியை ஆன் செய்து விடலாமா?
முடிந்தவரை, இப்படி செய்வதை தவிர்க்கவும். உங்கள் டிவி ஸ்க்ரீனை சுத்தம் செய்து முடித்ததும், டிவியை மீண்டும் கனெக்ட் செய்யும் முன், அதன் ஸ்க்ரீன் முழுமையாக உலர வைக்கப்பட வேண்டும். ஈரமான புள்ளிகள் ஸ்க்ரீனில் அப்பட்டமாக தெரியும், பின்னர் அதுவே கூட ஓரு கறையாக மாறிவிடலாம். பிறகு டிவி ஸ்க்ரீனை துடைத்ததிற்கு புண்ணியமே இல்லாமல் போய் விடும்.