முன்னெல்லாம் டாக்டரிடம் போனால், ‘ எங்கே நாக்கை நீட்டுங்க.. கையைக் காட்டுங்க.. கண்ணை விரிச்சுக் காட்டுங்க.. மலம் நல்லாப் போகுதா? என்ன சாப்பிட்டீங்க?’’ என்று வரிசையாக பல கேள்விகள் கேட்பார்.. அதிலேயே அந்த நபருக்கு என்ன பிரச்னை என்று பாதிக்கு மேல் விடை தெரிந்து விடும்.. அப்புறம் நாடி பார்ப்பார்.. ஸ்டெத் வைத்து பரிசோதிப்பார்.. அதில் மிச்சமிருக்கும் பிரச்னையும் தெரிந்து விடும்.. ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, ஸ்கேன் எல்லாம் இல்லாமலேயே உடம்புக்கு என்ன என்று சிம்பிளாகக் கண்டுபிடிக்கப்பார்ப்பார்கள்.
பார்த்தவுடனே எப்படி நமக்குள் இருக்கும் நோய்களை, எந்தப் பரிசோதனையும் இன்றி கண்டு பிடிக்கிறார்கள்? எல்லாம் நம் உடம்பில் தெரியும் அறிகுறிகளை வைத்துதான்..
நாம் பரிசோதனைகளைக் குறைத்து பலன் பெற, இந்த மாதிரியான அறிகுறிகளை வைத்து எப்படி நோயைக் கணிப்பது என்று நமக்கும் சில டிப்ஸ் தந்திருக்கிறார்கள்.. இதோ உங்களுக்காக..
தூங்கி எழுந்தவுடன் சிலருக்கு முகம் வீங்கிக் காணப்படும். என்றோ ஒருநாள் இருந்தால் வேறுவிஷயம். ஆனால், இது தொடருமானால் சிறுநீரக நோய்க்கான பரிசோதனை செய்து பார்த்துவிடுங்கள்.
தினமும் காலை எழுந்த வுடன் தலைவலி வருகிறதென்றால் அவருக்கு பீ.பி. இருக்கலாம். செக் செய்து கொள்ளுங்கள்.
வயிறு வீக்கம் இருந்தால் ஈரல் செயல்பாட்டில் குறைவு இருக்கலாம். குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட செரிமான சிக்கல் பிரச்னைகளாலும் வயிறு வீக்கம் வரலாம். பீ கேர்ஃபுல்!
சிலருக்கு முகம் நார்மலாக இல்லாமல் உப்பலாக இருக்கும். சருமம் சற்று தடிமனாகி, வறண்டும் போயிருக்கும். நாக்கு தடித்து, குரல் கரகரப்பாக ஒலிக்கும். இப்படி உணர்ந்தால் ஹைபோ தைராய்டு இருக்கலாம். பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
தொப்புளின் முகப்பு, ஆப்பிளின் முன்பகுதி போன்ற அமைப்பில் சற்று உப்பி இருந்தால் அந்த நபர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம். அல்லது இனி வரலாம்.
முகத்தில் ரொம்ப வறட்சி, சுருக்கம் இருந்தால் அவர்களுக்கு மலச்சிக்கல் இருக்கும்.
கழுத்துக்குப் பின்னாடி சதை இருந்தால் அவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி, உடம்பில் சக்திக் குறைவு, ஞாபகமறதி ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு திடீரென ஈறு வீக்கம் வந்தால் உடனே டாக்டர்கிட்ட செக்கப் பண்ணிடுங்க. கவனிக்கலேன்னா ‘ப்ரீ மெச்சூர் பேபி’ வரக்கூட 40% வாய்ப்புகள் இருக்கு. இம்மாதிரியான அம்மாக்களுக்கு ஹைபர் டென்ஷன் இருக்கலாம்.