திருக்குற்றாலம் அருவியில் குளிக்க கடந்த நூற்றாண்டில் தீண்டாமை கடைப்பிடிக்கப் பட்டதாக பொய்களைச் சொல்லி வந்த குழுக்கள், இந்த நூற்றண்டில் ஆட்சியைப் பிடித்து, நவீன தீண்டாமையைக் கடைப்பிடிக்கின்றன. இந்தத் தீண்டாமை, பணம் படைத்தவன், ஏழைபாழை என்ற 21ம் நூற்றாண்டின் நவீன தீண்டாமை.
தென்காசி மாவட்டம் குற்றாலம் சுற்றுலாத் துறை மற்றும் தமிழக அரசு, அருவிகளில் குளிப்பதற்கு தடை நீட்டித்துள்ளது. அனைத்து அருவிகளிலும் குற்றாலம் காவல் துறை சார்பாக கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
ஆனால் வனத் துறைக்கு உட்பட்ட சிற்றருவியில் மட்டும் முக்கிய பிரமுகர்கள் என்ற பெயரில் பணம் படைத்தவர்கள் உல்லாசக் குளியல் நடத்த அனுமதிக்கப்படுகிறார்கள்…
நேற்றும் கூட உள்ளாட்சித்துறை முக்கிய பிரமுகர்கள் குளித்து விட்டுச் சென்றுள்ளனர். அனைத்து அருவிகளிலும் காவல் துறை கட்டுப்பாட்டில் இருந்து வரும் நிலையில் வனத் துறைக்கு உட்பட்ட அருவியில் மட்டும் அரசு அதிகாரிகளும் பணம் படைத்தவர்களும் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது பொதுமக்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது.