‘டார்லிங் ஹில்’ டார்ஜிலிங்

 

 
க்லென்பர்ன் டீ எஸ்டேட்

டார்ஜிலிங்கை எப்போதும் ‘டார்லிங் ஹில்’ என்றுதான் ஆங்கிலேயர்கள் சொல்வார்கள். அப்படி காதலோடு இணைந்த பந்தம் அது. கொடுமையான வெயில் காலத்தில் கூட 25 டிகிரி செல்சியஸை தாண்டியதில்லை. அப்படியொரு குளுமை நிலவும் இடம்.

மலை ரயிலில் பயணம் செய்து டார்ஜிலிங்கை அடைவது தனி இன்பம் என்றால் அங்கிருக்கும் இங்கு ஐந்து தலைமுறைகளாக 150 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் ‘க்லென்பர்ன் டீ எஸ்டேட்’டில் அமைந்திருக்கும் ஹோட்டல் காதலர் நெருக்கத்தை இன்னும் கூட்டும். 1860-ல் கட்டப்பட்ட இந்த கட்டடம் காலனிய கலையை எடுத்துக்காட்டுகிறது.

நீண்டு இருக்கும் இதன் வராந்தாவில் அமர்ந்தபடி கஞ்சன் ஜங்கா சிகரத்தைப் பார்க்கலாம். தாழ்வாக அமைந்திருக்கும் தேயிலைத் தோட்டத்தையும் பார்க்கலாம். தேயிலை பசுமையழகு என்றால், கஞ்சன் ஜங்கா பனி வெண்மையழகு. இப்படி அழகுகள் போட்டிப் போடும் இடத்தில் தங்குவது இனிமை நிறைந்த அனுபவமாகும்.

வராந்தா

இங்கு நான்கு அறைகள் இருக்கின்றன. நான்குமே பாரம்பரிய ஆங்கிலேயர் பாணியில் இருக்கும் இடமாகும்.

பின்னணியில் கஞ்சன்ஜங்கா சிகரம்

மேற்கு வங்காளம், சிக்கிம் மாநிலங்களின் எல்லைப் பகுதியில் இந்த இடம் அமைந்துள்ளது. விமானம், யஹலிகாப்டர், படகு மூலம் இந்த இடத்தை அடையலாம். டார்ஜிலிங்கில் இருந்து ஒன்றரை மணி நேர சாலைப்பயணத்தில் இங்கு வந்து சேரலாம்.

அறையின் சிட்டிங் ரூம்

க்லென்பர்ன் டீ எஸ்டேட் ஹோட்டலே சொகுசாக தங்க ஏற்றது. இருவர் ஓர் இரவு தங்க கட்டணம் ரூ.30,000.