விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலில், வரும் ஆகஸ்ட் 11ம் தேதி ஆடி அமாவாசை திருவிழாயொட்டி மாவட்ட ஆட்சியர் சிவஞானம், அங்கு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், இரவு நேரத்தில் தாணிப்பாறைக்கு பஸ் இயக்கப்படாது. பாலித்தீன், கேரிப்பை, தீப்பெட்டி கொண்டு வர அனுமதியில்லை. துணிப்பை வழங்கப்படும். தண்ணீர் பாட்டில் கொண்டு செல்லலாம். ஆகஸ்ட் 9 முதல் 14ம் தேதி வரை 6 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்றார்.