04/07/2020 5:37 AM
29 C
Chennai

ஆர்ச்சைத் தாண்டி ஆர்ப்பரித்த குற்றால அருவி… கடந்த வருடங்களில் இதே நாளில்!

இதனால் வரிசையில் நின்று ஆண்கள் குளிக்கும் நிலை தொடர்ந்தது. ஆயினும் ஐந்தருவியில் மூன்று அருவிகளில் தண்ணீர் விழுந்தது. அதில் பெண்கள் உற்சாகமாகக் குளியல் போட்டனர்.

Must Read

பஞ்சாங்கம் ஜூலை 04- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் - ஜூலை-04 *பஞ்சாங்கம் ~ஆனி ~20(04.07.2020) *சனிக்கிழமைவருடம்~...

ஸ்ரீரங்கம் கோவிலில்… பெரிய பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம்!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று பெரிய பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் ஜூலை (3-7-2020)

விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக மீண்டும் ராஜேந்திர பாலாஜி!

விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக ராஜேந்திர பாலாஜி நியமனம் - அதிமுக அறிவிப்பு!

courtallam pastyears horz ஆர்ச்சைத் தாண்டி ஆர்ப்பரித்த குற்றால அருவி... கடந்த வருடங்களில் இதே நாளில்!

குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் சுமாராகவே விழுகிறது. கடந்த காலங்களில் இதே நாளில் ஆர்ச்சைத் தாண்டி ஆர்ப்பரித்துக் கொட்டியது அருவி. ஆனால் இப்போதோ பாறையை ஒட்டிக் கொண்டு வடிந்து களை இழந்து காணப் படுகிறது அருவி.

கேரளத்தில் பருவமழை தொடங்கப்பட்டு விட்டது என்று கூறப்பட்ட ஜூன் 8ம் தேதியை அடுத்து, குற்றாலத்தில் சீஸன் தொடங்கிவிட்டதாக கடந்த ஜூன் 9ம் தேதி அறிவித்தார்கள். அதன்படி, மாலை நேரம் குளுகுளுவென காற்றும் சாரல் மழையும் இருந்தது. பின்னர் மெயின் அருவியில் முதல் நீர் விழத் தொடங்கியதை ஆர்வத்துடன் பலரும் போட்டோ, வீடியோ எடுத்து வெளியிட்டார்கள்.

courtallam jun20 ஆர்ச்சைத் தாண்டி ஆர்ப்பரித்த குற்றால அருவி... கடந்த வருடங்களில் இதே நாளில்!எல்லாம் அடுத்த 3 நாட்கள் தான். பின்னர் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மழை இல்லாமல் இருந்தது. இதனால் அருவிகளில் தண்ணீர் அதிகம் விழவில்லை.. சுற்றுலா பயணிகள் பலரும் ஆர்வத்துடன் வந்து குளிக்கும் மெயின் அருவியில், வழக்கமாக ஆண்கள் போனால் போகிறது என்று தலை காட்டும் பகுதியில் குறைவாக தண்ணீர் விழுகிறது. ஹோவென்ற இரைச்சலுடன் தண்ணீர் விழும் பகுதி காய்ந்து போய்க் கிடக்கிறது.

இதனால் வரிசையில் நின்று ஆண்கள் குளிக்கும் நிலை தொடர்ந்தது. ஆயினும் ஐந்தருவியில் மூன்று அருவிகளில் தண்ணீர் விழுந்தது. அதில் பெண்கள் உற்சாகமாகக் குளியல் போட்டனர்.

இந்த நிலையில் வியாழக்கிழமை இன்று காலை லேசாக சாரல் மழை பெய்தது. மதியத்தில் சில நிமிடங்கள் மழை பெய்தது. மலைப் பகுதியில் மேகமூட்டமாகக் காணப் பட்டது. இதனால் நாளை அருவியில் தண்ணீர் அதிகரிக்கும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர் உள்ளூர் வாசிகள். சனி ஞாயிறு வார விடுமுறை நாட்களில் அதிகம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அப்போது சாரலும் ஓரளவு அருவியில் தண்ணீரும் விழும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

- Advertisement -
- Advertisement -Dhinasari Jothidam ad ஆர்ச்சைத் தாண்டி ஆர்ப்பரித்த குற்றால அருவி... கடந்த வருடங்களில் இதே நாளில்!

பின் தொடர்க

17,874FansLike
78FollowersFollow
70FollowersFollow
900FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கொரோனா; காய்ச்சலை கண்டறியும் தானியங்கி கருவி! பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் கண்டு பிடிப்பு!

தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றின் நுழைவாயிலில் வைக்கலாம்.

சமையல் புதிது.. :

ஆஹா சூப்பர் சுவிட்: போஹா செஞ்சு அசத்தலாம்!

போஹா என்பது ஒரு இனிப்பு பலகாரம் இது வட இந்தியாவில், குறிப்பாக உத்தர பிரதேசத்தில் மிகவும் பிரபலமானது. இதனை பண்டிகைக் காலங்களில் செய்வார்கள்

சினிமா...

விஷால் ஏமாந்த ரூ.45 லட்சம்!

விஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

டிக்டாக் தடை: அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்!

டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை - மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்
Source: Vellithirai News

மரணம் தான் எங்களை பிரிக்கும்.. ஹெலனுக்கு அவரது கணவன் கிடைக்கப் போவதில்லை: வனிதா விஜயகுமார்!

எங்கள் திருமணத்தின் போது கூட நான் தான் ஆல்கஹால் (மது) அருந்தினேன்.

More Articles Like This