- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் தனிமையில் இனிமை காணலாம்!

தனிமையில் இனிமை காணலாம்!

தனிமையில் இனிமை காணலாம் | Benefits of Self-Quarantine
COVID – 19 ( Corona logical – Chronological )

 உலகை அச்சுறுத்தும் கொடிய வைரசாக கொரோனா அறியப்படுகிறது. பொருளாதாரம், மக்களின் பழக்க வழக்கம், அறிவியல் முன்னேற்றம் என்று ஒட்டுமொத்தமாக வாழ்வியலை நாசம் செய்யும் பயங்கர அரக்கனாக கொரோனா தாக்குதல். இதனை எவ்விதம் தடுப்பது அல்லது எவ்வளவு காலம் இதன் தாக்கம் எதிரொலிக்கும் என்பதை அறியமுடியாமல் ஸ்திரத்தன்மையற்ற ஒரு நிலைப்பாடு நிலவுகிறது. அணு ஆயுதங்களையும், ஆட்கொல்லி மருந்துகளையும் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் அலறித் துடிக்கும் படியாக இதன் தீவிரம் தாண்டவமாடுகிறது.

மக்கள் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொன்னது போக, தற்போது கிராமம், நகரம், மாநிலம், ஒட்டுமொத்த நாடு என்று தனிமைப் படுத்தப்படுகிறது. “நாடுகளையும் நகரங்களையும் விட்டு வெளியேற வேண்டாம்” என்றவர்கள், இன்று “வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி இருங்கள்” என்கின்றனர்.

நோயின் அறிகுறியோ! அல்லது நோய் தொற்று உள்ளவர்களின் சம்பந்தப்பட்டவர்களோ! உடனடியாகக் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது மக்கள் கூடும் இடங்களில் அவர்கள் சேரக்கூடாது, உணவு, உடை, வாழ்க்கை என அனைத்தும் தனியாக இருக்க வேண்டும். அவ்வப்போது நோய் தாக்குதல் குறித்த சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இது கொரோனாவின் பாதிப்பிலிருந்து மீளும் வழி என்றால், இனி கர்மாவின் பாதிப்பில் இருந்து மீளும் வழி என்ன என்பதைப் பார்க்கலாம்.

தேகத்தின் ஆரோக்கியத்திற்கான வழிகளை தான் மருத்துவர்கள் உபதேசிக்கின்றனர். ஆனாலும் தேகம் எப்படியும் அழியத்தான் போகிறது. என்ன செய்தும் அதை நிரந்தரமாக காக்க முடியாது. ஆனால் ஆத்மா அழியாதது. அதை பாதுகாப்பது நமது இன்றியமையாத கடமை.

ALSO READ:  தெருக்களுக்கு சுதந்திரப் போராட்ட தியாகிகள் பெயர்களைச் சூட்டுக!

இதுவரை இந்து தர்மத்தையும், இந்துக்களை மட்டுமே குறி வைத்து கேலி பேசி வரும் கட்டிபிடி கொள்கையாளர்களும், இந்த கட்டுரையை கவனமாகப் படிக்கவேண்டும். இந்த விஷயம் பகவத் கீதையின் பதிமூன்றாவது அத்தியாயத்தில் வருகிறது.

பதிமூன்றாவது அத்யாயம் தேகம், அதன் தலைவனாகிய ஆத்மா என் இருவரின் நிலை குறித்து விவரிக்கிறது. அதாவது வீடு, அதன் யஜமானன் – அதாவது வீட்டுக்காரன் எனும் இருவரின் நிலைப்பாடு இங்கு வர்ணிக்கப்படுகிறது.

எப்படி செங்கல், மணல், ஜல்லி, சிமென்ட் கலவைகளால் வீடு உருவாக்கப்படுகிறதோ அப்படியே நீர், நிலம், காற்று முதலிய ஐந்து திரவியங்களின் சேர்க்கையால் தேகம் உண்டாகிறது.

புயல், மழை, வெயில், பூகம்பம் முதலியவற்றால் உறுதியான வீட்டிற்கு ஆபத்து உண்டாவது போன்று புண்ய, பாப கர்மாக்களால் தேகத்துக்கு நோய், நொடி ஆபத்துக்கள் உண்டாகின்றன. அப்போது ஆத்மஜ்ஞானி தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும். இங்கு ஏழாம் ச்லோகம் முதல் ஒன்பதாம் ச்லோகம் வரையிலும் ஆத்மஜ்ஞானியின் சுயபரிசோதனை சொல்லப்படுகிறது.

அதாவது ப்ளட், யூரின், மோஷன் என நோய் அறிகுறி அறிய பல டெஸ்ட்கள் எடுப்பது போன்று ஆத்ம குணத்தை அறிய சில பரிசோதனைகளுக்கு உட்படவேண்டும்.
1. கர்வம் கொள்வது
2. வீண் ஜம்பம்
3. ஜீவஹிம்சை
4. மற்றவைகளை துன்புறுத்துவது
5. கபடமாகயிருத்தல்
6. பெரியோரைப் பணியாதது
7. தேகம், மனம் சுத்தமின்மை
8. நாஸ்திக்யம் பேசுதல்
9. மனதை அலை பாயவிடுதல்
10. சிற்றின்பங்களில் ஆசை
11. பேராசை
12. உடலைப் பேணுவதில் விருப்பம்
13. பிறப்பு, இறப்பு, மூப்பு, பிணியின் பயங்கரம் அறியாமை
14. உற்றார், உறவினரிடம் அதிகபற்றுதல்
15. அலைபாயும் மனது.
இவை முதலியன பாஸிடிவ் (அதாவது) நம்மை அழிக்கும் நோய் தொற்றுக்காண காரணிகள் (அதாவது) அறிகுறிகள். இவை அனைத்து நெகடிவ் (அறிகுறி இல்லாமை) நோயற்ற சௌக்யத்தைத் தர வல்லவை.

ALSO READ:  கரூர்: தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழா; விழிப்புணர்வு பிரச்சாரம்!

இங்கு ஒரு கேள்வி! இவையனைத்தும் நெகடிவ் என வந்தால் ஆரோக்யமானவன் என்று தானே பொருள். அதன் பின் என்ன பயம்? என்றால் உண்மைதான். ஆனால் நோயுள்ளவனிடமிருந்து விரைவாக வியாதிகள் பரவுவது போன்று ஆத்மகுணம் பெற்றவனையும் பீடிக்கும் தொற்று நோய் இந்த துர்குணங்கள். ஆதாவது இதில் ஒன்று தொற்றிக் கொண்டாலும் பாஸிடிவ் (அதாவது) நோய்தாக்குதலின் அறிகுறி உண்டு.

இதனால் ஆரோக்யமானவன் கூட (அதாவது ஆத்மஜ்ஞானம் பூரணமாகப் பெற்றவன்) தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும். ஸர்வேஸ்வரனான எம்பெருமானிடம் பக்தி பூண்டவனாக ஜனத்திரனில் வெறுப்படைந்து, ஜனங்கள் இல்லாத அமைதியான தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும். தான் ஆரோக்யமானவனாக இருந்தாலும்கூட தனக்கு தொற்றுநோய் வாராமல் இருக்க ஆத்மஜ்ஞானியின் தனிமை வாசம் அவசியமாகிறது. ஜடபரதர், ரைக்வர் முதலிய ஆத்மஜ்ஞானிகள் ஏகாந்தமான (தனிமையான) வாசத்தைத்தான் விரும்பினர்.

அன்பர்களே பகவத்கீதை என்பது எக்கால கட்டத்திற்கும் பொருந்தும் சநாதனதர்ம உபதேச நூல். இதிலுள்ள சூட்சுமங்களை குருமுகமாகக் கற்றால் வாழ்க்கையில் மேன்மை பெறலாம். கபடர்கள், நாஸ்திகர்கள், நயவஞ்சகர்கள் இவர்களுடன் நாம் சேருவதால் நமது ஆத்மகுணத்திற்கு ஆபத்து உண்டாகிறது என்பதை அறியவேண்டும். அவர்களுடன் பேசுவதைக் கூட (விவாதத்திற்காக) தவிருங்கள் என்கிறார் சுவாமி வேதாந்த தேசிகர். எனவே இத்தகையவர்களிடமிருந்து தள்ளியிருத்தலை தொடர்ந்தால் கர்மா (கொரோனா)விலிருந்து முழுவதுமாக நம்மை தற்காத்துக் கொளல்முடியும். உடலுக்கு மட்டுமல்ல உள்ளத்துக்கும் தூய்மை அவசியமன்றோ! இந்தத் தனிமை நமது ஆத்மாவின் இனிமையைத் தரட்டும்.

ALSO READ:  தமிழகத்தில் பாஜக., ஆட்சிக்கு வரும்போது அரசுப் பள்ளிகளை பிஎம்ஸ்ரீ பள்ளிகளாக மாற்றுவோம்!

இது Corono logical இல்லை Chronological – based on the advice by our Acharya Paramparai. அதாவது நம் முன்னோரின் பழக்கங்களை மறுபடியும் பின்பற்றுவோம்.

-Sri APN Swami

17/03/2020

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version