தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்த போது இயக்குனர்கள் ஆந்தாலஜி குறும்படங்களை இயக்கி அது ஓடிடியில் வெளியாவது அதிகரித்துள்ளது. ஏற்கனவே ‘புத்தம் புது காலை’ என்கிற தலைப்பில் ஒரு திரைப்படம் வெளியானது. இந்த படத்தை சுதா கொங்கரா, சுஹாசினி மணிரத்னம், கௌதம் மேனன்,ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்பாராஜ் ஆகியோர் இயக்கியிருந்தனர்.
இந்நிலையில், வெற்றிமாறன், கௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகிய 4 பேரும் ஆளுக்கொரு கதையுடன் இயக்கியுள்ள ஆந்தாலஜி திரைப்படம் ‘பாவ கதைகள்’ என்கிற பெயரில் உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது.
இந்த திரைப்படத்தில் சாய் பல்லவி, கௌதம் மேனன், சாந்தனு, பிரகாஷ்ராஜ், சிம்ரன், அஞ்சலி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் ரசிகர்கள் கூட்டம் கூடுவதில்லை. எனவே, ஓடிடியில்தான் ரசிகர்கள் திரைப்படங்களை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.