செல்வம் பெருக தாந்திரீக பரிகாரம்

தரித்திரம் நீக்கும் தாந்தீரிக பரிகாரம்
என் நண்பர் ஒருவர். நல்ல வசதிகாரர். அவர் விசித்திரமான பல பழக்கங்கள் உள்ளவர். அதாவது தாந்தீரிக பரிகார முறைகளில் அதிக நம்பிக்கை உள்ளவர். திடீரென பேப்பரில் ஏதாவது ஒரு நம்பரை எழுதிக் கொண்டிருப்பார். என்னங்க என்றால், இது எனக்கு வசிய நம்பர் என்பார். இது என்னன்னு தெரியுமான்னு ஒரு செடியின் வேரை எடுத்து காட்டுவார். தெரியலை என்று நாம் சொன்னால், இதை பணப் பெட்டியில் வைத்தால் பணத்தட்டுப்பாடே வராது என்பார்.
அவரின் செயல்கள் நமக்கு விநோதமாக பைத்தியக்காரத்தனமாக தெரியும். ஆனால் அதை எல்லாம் செய்துதான் அவர் வசதியாக இருக்கேன் என்பார். நாம் எதை முட்டாள்தனம், மூடநம்பிக்கை என்று ஒதுக்குகிறோமோ, அதுதான் அவருக்கும், அவரை போன்றவர்களுக்கும் சக்கஸ் பார்முலாவாக இருக்கிறது. அவரே சொல்கிறார். நிறைய பேர் வேதாந்தம் பேசிகிட்டு நல்ல விஷயங்களை கோட்டை விடுறாங்க. அதனால் யாருக்கும் நஷ்டம் என்பார். போகட்டும். நாம் விஷயத்திற்கு வருவோம்.