நீங்கள் புதன் ஆதிகக்கதில் பிறந்தவர்கள். கன்னியமானவர்கள், கவிப்புனைபவர்கள், கவிதாரசனை உள்ளவர்கள். கற்றது குறைவாக இருப்பினும் மெத்தப்படித்த மேதாவிகள் போல் பேசுவதிலும், வாதம் செய்வதிலும், செயல்படுவதிலும் வீராதி வீரர்கள், சூராதி சூரர்கள். பிறப்புக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். அந்த பிறவிப் பெரும் பயனை அடைய துடிப்பவர்கள். எதையும் நன்கு திட்டமிட்டு, ஆராய்ந்து பின்னர் செயல்படுத்த நினைப்பவர்கள். பாதி கிணறு தாண்டி பழக்கம் இல்லாதவர்கள். சுயநலம் இருந்தாலும் பொதுநலமும் இருக்கும். அது உங்கள் பிறவிக் குணம். எதை செய்ய வேண்டும், எதை தவிர்க்க வேண்டும், அதை எப்போது செய்ய வேண்டும் என்பதெல்லாம் நுட்பமாக ஆராய்ந்து செயல்படுத்தக் கூடியவர்கள் என்கிறது சாஸ்திர விதிகள். சரி… தமிழ் புத்தாண்டு என்ன சொல்கிறது?, என்பதைப் பார்ப்பதற்கு முன் தற்போதைய நிலவரத்தைப் பார்ப்போம்.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari