தருமபுரி: தட்சண காசி கால பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள த ட் ச ண காசி கால பைரவர் கோவில் தேய்பிறை அஷ்டமி விழா இன்று நடைபெற்றது.
காலை 6 மணி முதல் கால பைரவருக்கு அஷ்ட பைரவர் யாகம் அஷ்டலட்சுமி யாகம் தன ஆகர்ஷன குபேர யாகம் அதிருத்ர யாகம் ஆகிய யாகங்கள் நடைபெற்றன.
ராஜ அலங்கரத்தில் கால பைரவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கால பைரவருக்கு 64 வகையான அபிஷேகங்கள். 1008 அர்ச்சனை 28 ஆகம பூசைகள் சதுர் வேத பாராயண சிறப்பு உபசார பூசைகள் மற்றும் மங்கள ஹாரத்தி ஆகியவை நடைபெற்றன.
இரவு 10 மணி முதல் 12 மணி வரை குருதியாகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கோவில் பணியாளர்கள் நண்பர்கள் குழவினர் சிறப்பாக செய்திருந்தனர்.