இந்துக்களின் முழுமுதற் கடவுளான விநாயகரை பொது இடத்தில் வைத்து வழிபட தமிழக அரசு வருடா வருடம் விதிமுறைகளை அதிகரித்த வண்ணம் உள்ளது. இவ்வருடம் எல்லாவற்றிற்கும் மேலாகச் சென்று அரசாணை வெளியிட்டுள்ளது. 24 கட்டளைகளை அரசாணையாக அளித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கொடுக்கப்பட்டுள்ள கட்டளைகளின் தன்மை என்ன? அவை உண்மையில் நடைமுறைபடுத்தக் கூடியதா?
இந்த அரசாணை கொண்டுவந்துள்ள அரசின் நோக்கம் என்ன? போன்றவற்றை திரு.இளங்கோவன், இந்து முன்ணணியின் மாவட்டத்தலைவர் அவர்கள் நமக்கு தெளிவாக விளக்குகிறார்.
இவற்றை நாம் கேட்டு அறிந்து நம் தமிழ் பாட்டி போற்றி வணங்கி துதித்த விநாயகரை வழிபட அரசு ஏற்படுத்தியிருக்கும் தடையை அகற்ற இந்துக்கள் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம். தடைகளை அகற்றும் விநாயகருக்கே தடை விதிக்க நினைக்கும் அரசுக்கு நம் எதிர்ப்பை தெரிவிப்போம்! இந்த பதிவினை அதிகம் ஷேர் செய்து இந்துக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்!
நாம் ஒவ்வொருவரும் நம் பகுதியில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு கொண்டாடப்படும் இடத்திற்குச் சென்று நம் ஆதரவை தெரிவிப்போம்!
நேயர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!