செங்கோட்டையில் அமைதி நிலவ நடவடிக்கை: ஐ.ஜி.,

அதில், செங்கோட்டையில் அமைதியை தொடர்ந்து எடுத்துச் செல்வது எவ்வாறு என்று கலந்து ஆலோசித்தோம். அதற்குரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்

செங்கோட்டையில் ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி…

அனைத்து சமுதாய உறுப்பினர்களின் அமைதிக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐஜி., ஆட்சித்தலைவர், காவல் துறை சார்பில் இன்று அமைதிக் கூட்டம் ஒன்று நடத்தினோம். அதில், செங்கோட்டையில் அமைதியை தொடர்ந்து எடுத்துச் செல்வது எவ்வாறு என்று கலந்து ஆலோசித்தோம். அதற்குரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்

இந்தக் கூட்டத்தின் வாயிலாக செங்கோட்டையின் அனைத்து சமுதாய மக்களையும் அமைதி காக்குமாறு கூட்டத்தில் கேட்டுக் கொண்டோம். ஏற்கெனவே இருந்த ஒற்றுமை தொடர்ந்து இருக்க வேண்டும். அமைதி காப்பதற்கு மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் எல்லா நடவடிக்கையும் எடுத்து, தொடர்ந்து வழி செய்து கொண்டிருக்கிறது. மேலும் தற்போது செங்கோட்டையில் அமைதி நிலவிக் கொண்டிருக்கிறது. அதை தொடர்ந்து எடுத்துச் செல்வோம். தகுந்த நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப் பட்டுள்ளது. .. என்றார்.