தருமபுரி: சென்னையைச் சேர்ந்த சிலர் செப்.25 நேற்று ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு குளிப்பதற்காகவும், விடுமுறை தினம் என்பதால் குழந்தைகள், சிறுவர்கள், பெண்களை அழைத்துக் கொண்டு சுற்றுலாவாக வந்தனர்.
அவர்கள் பரிசலில் ஏறும் போது, பரிசலில் பயணம் செய்வதற்கான பயணச் சீட்டு வாங்கும் போது வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பரிசல் காண்ட்ராக்டர் தனது கெத்தைக் காட்ட, ஒகேனக்கல் காவல் நிலையத்துக்கு தவறான தகவலைக் கொடுத்துள்ளார். இதை அடுத்து அங்கே வந்த காவல் உதவி ஆய்வாளர், அங்கிருந்தவர்களிடம் கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
அங்கே உடன் நின்றிருந்த சுற்றுலா பயணிகளான பெண்களையும் சிறுவர்களையும் கடந்து, ஆண்களை கடுமையாகத் தாக்கி அவமானப்படுத்தியுள்ளார்.
காவலர்கள் அல்லாத ( Home Gourd) காவலர்கள் பயணிகளை அடித்து இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் அரை நிர்வாணமாக அமரவைத்துள்ளனர். மேலும், கீழ்த்தரமான வார்த்தைகளால் பெண்களை இழிவு படுத்திப் பேசியுள்ளனர்.
இவ்வாறு கண்மூடித்தனமாகத் தாக்கி, காவல் துறையினர் சட்டத்தையும், மனித உரிமையையும் மீறி உள்ளதாக உடன் வந்தவர்கள் குற்றம் சாட்டினர். இதை அடுத்து, இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இவ்வாறு காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொண்டவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.