சென்னை: தன் மீது சுமத்தப் படும் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து முதல் முறையாக கை விரித்துள்ளார் வைரமுத்து. அதாவது கை விரித்து டிவிட்டர் பதிவில் கருத்து கூறியுள்ளார்.
பெண்ணினத்தின் வானம் இப்போது செக்கச் சிவந்திருக்கிறது. செக்கச் சிவந்த வானத்தின் பாடலுக்குப் பின்னர், வைரமுத்து டிவிட்டியிருப்பது, சின்மயியினால் செக்கச் சிவந்திருக்கும் இவரின் வானத்தின் குரலைத்தான்!
ஏற்கெனவே பண்டைத் தமிழர் குல தமிழினத்தின் பெண்மை அடையாளமான ஆண்டாளை, இழி சொல்லால் குறிப்பிட்டு தமிழ்ப் பெண் இனத்தையே அசிங்கப் படுத்தி அவதூறு கிளப்பினார் வைரமுத்து. அந்த வார்த்தையில் இருந்தே, வைரமுத்துவின் இயல்பு, நோக்கம், பழக்க வழக்கம், எத்தகைய சிந்தனையுடன் இருப்பவர், அவரது உள்நோக்கம் எல்லாம் வெளித்தெரிந்தது. அப்போது, தான் எவர் மனம் புண்பட்டிருந்தாலாவாது அதற்காக வருத்தப் படுவதாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
அப்போதும் வீடியோ பதிவின் மூலம் தான் சொல்ல வந்தது நியாயமே என்று நியாயவாதத்தைப் பதிவு செய்து, பின் அது யார் மனத்தையாவது புண்படுத்தியிருந்தால் வருந்துவதாகக் கூறினார். மனம் புண்பட்டதால்தானே அத்தகைய நிலையில் மன்னிப்பு கேட்குமாறு போராட்டம் நடத்தியவர்கள் கோரினார்கள் என்ற அடிப்படை நுட்பம் கூடத் தெரியாதவர் போல் பேசினார்.
இப்போது, நொந்து போன நிலையில் உயிருடன் உலவிக் கொண்டிருக்கும் பெண்கள் சிலர் கூறும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு வருத்தம் தெரிவிக்க அதே போன்றதொரு அழுகை வீடியோவை வெளியிடாமல், டிவிட்டரிலேயே கருத்தைத் தெரிவித்து முடித்துக் கொண்டார்.
அவரது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருப்பது…அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.
அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.
— வைரமுத்து (@vairamuthu) October 10, 2018