பாபநாசம்: தாமிரபரணி மகா புஷ்கர விழாவை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் இன்று முற்பகல் 12 மணி அளவில் பாபநாசம் வந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, அவர் தாமிரபரணி ஆற்றில் இறங்கி புனித நீராடி, மகா புஷ்கர விழாவை தொடங்கி வைத்தார். அவருக்கு அகில பாரதீய துறவியர் சங்கம் நடத்தும் ‘தீர்த்தமாடுதல் பெருவிழா’ தலைவர் சுவாமி சரவணானந்தா சிறப்பான வரவேற்பு அளித்தார். தொடர்ந்து படித்துறைக்கு அழைத்துச் சென்று, புனித நீராட வழிகாட்டினார்.