Home வீடியோ நக்கீரன் கோபால் கைதுக்கும் பாஜக.,வுக்கும் என்ன தொடர்பு?

நக்கீரன் கோபால் கைதுக்கும் பாஜக.,வுக்கும் என்ன தொடர்பு?

கரூர்: நக்கீரன் கோபால் கைதுக்கும், பா.ஜ.க வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; நக்கீரன் கோபால் நல்ல பத்திரிக்கையாளரின் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் தான் எழுதி வருகின்றார் என்று தமிழக பா.ஜ.க இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் பி.செல்வம் கரூரில் செய்தியாளர்களிடம் பேசினார்.

கரூரில், பா.ஜ.க கட்சியின் நாடாளுமன்ற நிர்வாகிகள் கூட்டம் கோவை சாலையில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்., தமிழக பாரதீய ஜனதா கட்சியின் இளைஞரணி மாநிலத் தலைவர் வினோஜ்.பி.செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்., தமிழக அளவில் ஆங்காங்கே 67654 வாக்குசாவடிகள் மற்றும் பூத்துகளுக்கு இளைஞரணி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டும், மத்திய பா.ஜ.க அரசின் 4 ½ ஆண்டுகள் சாதனைகளை மக்களிடையே பரப்பப்பட்டும், கொண்டு செல்லப்பட்டு வருகின்றது.

மேலும், வரப்போகும் நாடாளுமன்றத்தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக, நாங்கள் (பா.ஜ.க இளைஞரணி) தயாராகி வருகின்றோம், அதனடிப்படையில், எங்களின் முதற்கூட்டம் கரூரில் நடைபெற்று வருகின்றது! அதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கூட்டங்கள் நடைபெறும்,
மீண்டும், பிரதமர் மோடி தான் பிரதமர் ஆவார் ஆகவே, தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து மக்கள் மோடியை, பிரதமர் ஆக்குவார்கள்

நக்கீரன் கோபால் கைதிற்கும், பா.ஜ.க விற்கும் சம்பந்தமில்லை, அவரை கைது செய்தது, தமிழக அரசு, தமிழக காவல்துறை! நக்கீரன் கோபால் ஆதரமற்ற, செய்திகளை வெளியிட்டு, வருகின்றார். சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக, நல்ல பத்திரிக்கையாளர்களின் பெயரையும் கெடுக்கும் வகையில் நக்கீரன் கோபால் நடந்து வருகின்றார்.

பாரத பிரதமர் மோடி குறித்து ஆங்காங்கே தமிழக அளவில் அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு காவல்துறையிடம் பலமுறை நாங்கள் (பா.ஜ.க இளைஞரணி) மனுக்கள் கொடுத்தும் இதுவரை காவல்துறை நடவடிக்கை எடுக்க வில்லை,. ஆகவே, மத்தியில் ஆளும் பிரதமர் மோடி மீது அவதூறு பரப்புவதை மற்ற அரசியல் கட்சியினர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

மாநில செயலாளர் கோபிநாத், கரூர் பாராளுமன்ற இளைஞரணி பொறுப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version