வைரமுத்து மீது வெறுமனே குற்றம் மட்டும் சுமத்திக் கொண்டு இருக்காமல், சட்ட நடவடிக்கை எடுத்து உள்ளே தள்ள வேண்டும் என்று சின்மயியைத் தூண்டிவிட்டுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
வைரமுத்து தவறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம், ட்விட்டரில் எழுதுவதன் மூலம் வைரமுத்து மீது களங்கம் ஏற்படுத்தப் படுகிறது என்று சீமான் கூறியுள்ளார்.
இதனிடையே, வைரமுத்து மீது சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து வழக்கு தொடரப்படும் என்று சின்மயி கூறியுள்ளார்.
பாலியல் தொல்லை புகார் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மீது சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து வழக்கு தொடர இருப்பதாக பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் கூறிய புகாரை இல்லை என்று வைரமுத்து இதுவரை மறுக்க வில்லை என்று கூறியுள்ளார் சின்மயி!