மதுரை மாவட்டம் சோழவந்தான் காவல் நிலையத்தில் குருவித்துறை கோவிலில் திருடு போய் மீட்கப்பட்ட சிலைகளை சிலை தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்க வேல் பார்வையிட்டார்.
குருவித்துறை கோயில் ஊழியர்களிடம் பொன். மாணிக்கவேல் விசாரணை மேற் கொண்டு வருகிறார். 15 ஆம் தேதி அதிகாலை 1.00 மணி அளவில் கோவிலில் இரண்டு முகமூடிக் கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர். பின் 4 ஐம்பொன் சிலைகளை கொள்ளை அடித்து எடுத்துச் சென்றனர். அத தெய்வத் திருமேனிகள், இன்று காலை திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கல்யாணப் பட்டி கிராம வைகை ஆற்று ஓரத்தில் கண்டெடுக்கப் பட்டன.
அதிகாலை 3.00 மணி அளவில் சாக்கு மூட்டையில் இருந்த சிலைகளை கணேசன் என்பவர் கண்டெடுத்து, காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். இதை அடுத்து விரைந்து சென்ற விளாம்பட்டி காவல் நிலையத்தினர், சிலைகளை மீட்டனர். மீட்கப்பட்ட 4 ஐம்பொன் சிலைகளும் மதுரை மாவட்டம் சோழவந்தான் காவல் நிலையம் கொண்டு வரப்பட்டன. அவற்றை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் பார்வையிட்டு தற்போது கோவில் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.